வங்கி மேலாளர்: ஏன்யா.. மாடு வாங்க லோன் கேக்கறியே... எப்படி கட்டுற மாதிரி..!
வாடிக்கையாளர்: இதென்ன சாமி! கம்ப சூத்திரம் கயிறு போட்டுதான்..!
வங்கி மேலாளர்: அடப்பாவிங்களா?
-விஜி,
சென்னை. 10.
வள்: அந்த அதிகாரி கிட்ட பேசும்போது மட்டும் ஏன் மாஸ்க்கை கழட்டிட்டே?
இவள்: பல்லை காட்டி பேசினால் தான் அவர்கிட்ட காரியமாகும்னு சொன்னே!
-ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.
அவர்: மனைவியைவிட அவளோட புடவைகள்தான் மரியாதை கொடுக்குது!
இவர்: எப்படி?
அவர்: பீரோவைத் திறந்தால் அதுதானே நம்ம காலில் விழுது!
-உமர்,
கடையநல்லூர்.
மன்னர் ஏன் போருக்கு போகும்போது "ஹைட்ரஜன் சிலிண்டர்'-ஐ முதுகில் கட்டிட்டு போகிறார்?
எதிரிகள் சுற்றி வளைத்தால், புறமுதுகு காட்டி ஓடாமல் அப்படியே ஆகாயத்தில் பறந்து தப்பிக்கத்தான்!
- சம்பத்குமாரி,
பொன்மலை.
ஆசிரியர்: உங்கப்பா.. என்ன வேலை செய்கிறார்?
மாணவர்: எங்கம்மா சொல்ற எல்லா வேலையும் செய்றார் ஸார்!
-டி.மோகன்தாஸ்,
நாகர்கோவில்.
அம்மா : சம்பள கவரை டி.வி. மீது வைக்கிறீயே..? ஏன்!
மகன்: சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது, தொந்தரவு செய்தால் என் மனைவிக்கு கோபம் வரும்!
- அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்

பாஜக ஆட்சி அமைப்பதை யாரும் விரும்பவில்லை: மேதினிப்பூரில் மமதா!

இனி மும்பை இந்தியன்ஸை தடுத்து நிறுத்த முடியாது: திலக் வர்மா

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


