""எங்க வீட்டு வேலைக்காரி அக்கம்பக்கத்து செய்திகளை இப்போ பேப்பரில் டைப் பண்ணி கொடுத்துடுறா?''
""ஏன் ?''
""உட்கார்ந்து சொல்லிக்கிட்டு இருக்க அவளுக்கு நேரமில்லையாம்!''
இரா. அருண்குமார்,
புதுச்சேரி.
""கை கால் நல்லா இருக்கறப்ப பிச்சை யெடுக்கிறியே...கேவலமா இல்லையா?''
""அதெல்லாம் பாத்தா நாலு "பிளாட்" வாங்க முடியுமா தாயி''
அ.செந்தில்குமார்,
சூலூர்.
""அந்தக் குடை விற்பனை பண்ற கடையில் கூட்டம் அதிகமா இருக்கே ஏன்?''
""குடையை விரிச்சா பாட்டு பாடுமாம் அதான்''
பி.பரத்,
சிதம்பரம்.
""அப்பா.. மாம்பழத்துக்கு மூக்கு இருக்குமா?''
""அது எப்படிடா இருக்கும்''
""பின்னே ஏன்? கிளிமூக்கு மாம்பழம்
சொல்றாங்க!''
-பி.கனகராஜ்,
மதுரை.
"அந்த பேன்சி கடைக்காரர் ரொம்ப அப்-டேட்டா இருக்கிறாரா?''
""ஆமா! இங்கு குந்தவை கொண்டை கிடைக்குமுன்னு போர்டு வைச்சு இருக்காரே!''
மா.சந்திரசேகர்,
மேட்டுமகாதானபுரம்.
""வீட்டு வேலை செய்ய முடியல. நல்ல வேலைக்காரிய பார்த்து அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னா...''
""என்ன பண்ணிணார்''
""ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கார்''
வண்ணை கணேசன்,
சென்னை-110.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


