வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி... 

"இவர் ஒரு கால்நடை மருத்துவர்...!'""அப்போ எங்க போனாலும் நடந்து தான் போவாரா...?''

News image
Updated On :16 அக்டோபர் 2022, 11:29 am


"இவர் ஒரு கால்நடை மருத்துவர்...!'
""அப்போ எங்க போனாலும் நடந்து தான் போவாரா...?''

-அ.செந்தில்குமார்,  
சூலூர்.

"" ஜோதிடம் பார்க்கப் போய் கிலி பிடித்து ஓடுகிறாரே..!''
"" சீட்டு எடுக்கும் கிளி கொத்தி விட்டதாம்..!''

-மஞ்சுதேவன்,
 பெங்களூரு.

""எதுக்கு டாக்டர்.. ஒரு பாட்டியை உங்க ஆஸ்பத்திரியிலேயே பர்மனெண்டா இருக்காங்க..!''
""காசு கம்மியா வெச்சிருக்கிறவங்களுக்கு பாட்டி வைத்தியம் செய்து அனுப்பிடுவார்.?''

-எம்.அசோக்ராஜா, 
அரவக்குறிச்சிப்பட்டி.


""ஏம்பா தம்பி.. பஸ்ஸில் கடல்போல உள்ளே நிறைய இடம் இருக்கே.. வந்து உட்காருப்பா..?''
""சாரி.. கண்டக்டர் எனக்கு நீச்சல் தெரியாது..!''

-கே.இந்து குமரப்பன், 
விழுப்புரம்.


""பாட்டி.. என்னது கத்திரிக்காய் இவ்வளவு பெரிசா இருக்கு..''
""ஒட்டு கத்திரிக்காய் தம்பி. ..''

-பி.கவிதா, 
சிதம்பரம்.



""என்ன பொண்ணு பார்க்க வர்றதுக்கே வீட்டு வாசலில் பந்தல் போட்டிருக்கீங்க?''
""என் பொண்ணை பார்க்க வர்ற நூறாவது மாப்பிள்ளை ஆச்சே... அதான்...!''

-தீபிகா சாரதி, 
சென்னை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.