சிரி... சிரி...
By DIN | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

''ஸ்டிராங்கா காப்பி குடுப்பா!''
' 'எத்தனை காப்பி சார்?''
''ஒரு 10-12 காப்பி எடுத்திட்டு வாயேன்!''
- கி. வாசுதேவன்,
தஞ்சை.
''டாக்டர் எனக்கு கனவு அதிகம் வருது''
''ரீசார்ஜ் பண்ணாமல் டி.வி. பார்க்குறீங்க. நல்லதுதானே!''
-பி.பரத்,
சிதம்பரம்.
''என்னங்க. உங்க பிறந்த நாளுக்கு சூப்பர் டிரஸ் எடுத்திருக்கேன்?''
''அப்படியா? எங்கே எடுத்து வா?''
'' இருங்க. போட்டுட்டே வர்றேன்!''
- எ.என்.எஸ். மணியன்,
அந்தியூர்.
''என்னங்க. உங்க பிறந்த நாளுக்கு சூப்பர் டிரஸ் எடுத்திருக்கேன்?''
''அப்படியா? எங்கே எடுத்து வா?''
'' இருங்க. போட்டுட்டே வர்றேன்!''
- எ.என்.எஸ். மணியன்,
அந்தியூர்.
''அது என்ன சர்வர் வேஸ்ட் பேப்பர் ரோஸ்ட்?''
''பழைய மாவுல செஞ்சது சார்!''
-ப.சோமசுந்தரம்,
சென்னை- 129.
''ஆமாம். ஏம்பா இப்படி டேபிளில் அடிச்சிப் பேசறே?''
''அடிக்கலே சார். சத்தியம் செஞ்சேன்.''
''எதுக்கு''
''ஸ்வீட் போன வாரம் செஞ்சதான்னு கேட்டீங்களே? அதுக்காக இல்லேன்னு''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.