வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

'பக்கத்து வீட்டில் காப்பி தூள், சர்க்கரை வாங்கினீயா?'''ஏங்க?'''இப்ப. காப்பி இரவல் கேட்டு வந்திருக்காங்க பாரு!''

News image
Updated On :1 ஏப்ரல் 2023, 6:30 pm


'பக்கத்து வீட்டில் காப்பி தூள், சர்க்கரை வாங்கினீயா?''
'ஏங்க?''
'இப்ப. காப்பி இரவல் கேட்டு வந்திருக்காங்க பாரு!''



'பிரட் ஒரு வாரம் தாங்குமாங்க!''
'அதுல தேதி போட்டிருக்கு பாருங்க!''
'அதுல ஒன்றும் போடலையே?''
'தாராளமா தாங்கும். பிரிச்ச உடனே சாப்பிடுங்க!''



'எனக்கு சொந்தமுன்னு யாருமே கிடையாது!''
'சரி. என்னை உங்க சொந்தமுன்னு நினைத்து ஐநூறு ரூபாய் கடன் கொடுத்து உதவுக!''



'ஜங்க் புட் உடம்புக்கு ரொம்பவே கெடுதல்!''
''அப்புறம் எதுக்கு ஹோட்டலில் வந்து வாங்கறீங்க?''
'வீட்டுக்கு திடீர்னு விருந்தாளிங்க வந்துட்டாங்க!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

'ஏன்.. உங்க பையன் படுத்துகிட்டு சாப்பிடுறான்!''
'வேலை வெட்டிக்குப் போகாம உட்கார்ந்துகிட்டே சாப்பிடுறீயே! வெட்கமா இல்லையான்னு கேட்டேன். அதான் இப்படி!''

-எல்.சுஜிதா,
மதுரை.

'உன்னைக் காதலிக்கிறது காய்கறிக்கடைக்காரனா?''
'ஆமாம் உனக்கு எப்படி தெரியும்!''
'உன் முகம் உருளைக்கிழங்கு மாதிரி இருக்கு. உன் பார்வையில் கருணைக் கிழங்கு தெரியுது.  உன் பேச்சு மரவள்ளிக்கிழங்கு மாதிரி இனிக்குதுன்னு லவ் லெட்டரில் எழுதியிருக்கானே!''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

'என்னங்க! என்ன பட்ஜெட்டில் புடவையை வாங்கட்டும்.''
'நான் சொல்லி நீ கேட்கவா போற! உன் மனசுல என்ன பட்ஜெட்டோ அதான்!''
'உங்ககிட்ட பிடிச்சதே இதான்!''

-பி.பாலாஜி கணேஷ்,
சிதம்பரம்.

' சர்வர்..நேத்து சாம்பார் சூப்பர். அதே மாதிரி சாம்பார் கிடைக்குமா?''
'சார்! அதே மாதிரி சாம்பார் என்ன? அதே சாம்பார் இருக்கு! சாப்பிடுறீங்களா?''

-எம்.அசோக்ராஜா,
அரவக்குறிச்சிப்பட்டி.

'கொசு மருந்து இருக்கா!''
'சின்னது வேணுமா? இல்லை பெரிசு வேணுமா?''
'சின்னதே கொடுங்க. எங்க வீட்டுல எல்லாம் சின்ன கொசுவாதான் இருக்கு!



'ஏன்யா! ஆபிஸில் காலை ஆட்டினு உட்கார்ந்திருக்க?''
'சும்மா உட்கார்ந்திருந்தா தூக்கம் வருது சார்''

தீபிகா சாரதி,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.