''ஏண்டா மாப்ளே. சோகமாய் இருக்கே!''
''இன்னிக்கு என்வீட்டுல'' குழம்பு நல்லா வெச்சேன்'னு பாராட்டினேன் வம்பாயிடுச்சி!''
''அதுக்கு சந்தோஷம்தானே படுவாங்க!''
''அது பக்கத்து வீட்டுக்காரி வெச்ச குழம்புவாம்!''
-அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
''நான் தினமும் கீரியையும் பாம்பையும் தினமும் பார்ப்பேன்!''
''அது எப்படி?''
''ஆமாம். வீட்டில்தானே பாட்டியும் அம்மாவும் இருக்காங்க!''
-பி.பாலாஜி கணேஷ், சிதம்பரம்.
''ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கணும்!''
''என்ன சொல்றீங்க? புரியலையே?''
''நல்ல தேங்காய் பதமாய் ஒரு இளநீர் வெட்டுங்க! தண்ணீர் எனக்கு .. தேங்காய் சட்னிக்கு!''
''ஏம்பா? 'நூடுல்ஸ்' பார்சல் கேட்டு அரைமணி நேரத்துக்கு மேலாகுது!''
''கோவிச்சுக்காதீங்க சார். ஸ்டோரில் காஸ் எடுக்க போய் இருக்காங்க!''
''அப்ப. பாஸ்ட் புட் இல்லை. 'ஸ்லோ உணவகம்' பேரை மாத்தச்சொல்லுங்க?''
''ஏம்பா. சாப்பாடு, பணம், எதுவும் வேணாங்கிறே?''
''ஒரளவுக்கு நல்ல வசதியாக இருக்கேன் தாயி. நலம் விசாரிச்சு போக வந்தேன் மகராசி!''
-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.
''ஏம்பா! சர்க்கரையைவிட எடை குறைச்சலா போடுற!''
''சார். சுகர் லெவல் கூடியிருக்கேன்னு வருத்தப்பட்டீங்களே.. ஏதோ என்னால் முடிஞ்ச அளவுக்கு குறைக்கலாமேன்னுதான்!''
''என்ன கதாசிரியரே. கதையில் கசப்பு பதார்த்தமாக அடுக்கியிருக்கீங்க?''
''டைரக்டர் சார். கதாநாயகனுக்கு சர்க்கரை நோய் வரப்போவதை சிம்பாலிக்கா சொல்ற டெக்னிக்தான் இது''
-என்.கே.மூர்த்தி,
சென்னை.
''என்னம்மா. எதை கேட்டாலும் டக்குன்னு பதில் சொல்றீங்க? போர்டில் எழுதியிருக்கிறதை மட்டும் சொல்ல மாட்டேங்குறீங்க?''
''டாக்டர் . என் மாமியார்தான் நீ படித்த படிப்பை எங்கேயும் பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்களே!''
-ஏ.எஸ்.ராஜேந்திரன்,
விருதுநகர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


