வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

'என்னது கிழங்கு தோசையா?''ஆமா சார். உருளைக்கிழங்கை வேக வைச்சு தோசைக்கு நடுவே வச்சு குடுத்திடுவோம்..'

News image
Updated On :2 டிசம்பர் 2023, 6:30 pm


'என்னது கிழங்கு தோசையா?'
'ஆமா சார். உருளைக்கிழங்கை வேக வைச்சு தோசைக்கு நடுவே வச்சு குடுத்திடுவோம்..'

-பண்ருட்டி பரமசிவம்.

'அந்த ஹோட்டலில் கூட்டம் அள்ளுதே?'
'ஒரு கப் சாம்பார், ஒரு கப் சட்னி வாங்கினால் இரண்டு இட்லி இலவசமாம்...'

-மஞ்சுதேவன், பெங்களூரு.

'சாப்பாடு சுமார்தான் சொல்றீங்க? பேசாமல் வீட்டில் சாப்பிடலாமே..?'
'யார் இல்லேன்னு சொன்னது. வீட்டில் இதை தைரியமா சொல்ல முடியுமா?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'ஏம்பா சர்வர். இதை சாம்பாருன்னு சொல்லி ஊத்தறே? பார்த்தால் எங்களுக்குத் தெரியாதா?'
'சிலர் ரசம் என்று நினைச்சுப்பாங்க. அதான்..'

-கு.அருணாசலம், திருச்சி.

'அந்த ஹோட்டலில் தீப்பிடிச்சப்ப இட்லியெல்லாம் எரிஞ்சுப் போச்சா.. என்ன சார் சொல்றீங்க?'
'இட்லிகள் எல்லாம் பஞ்சு மாதிரி இருக்குமே..?'

-வி.ரேவதி, தஞ்சாவூர்.

'பக்கத்து இலை சாம்பார் என்னோட இலைக்கு ஓடி வந்தது?'
'பதிலுக்கு நீ என்ன செய்தே?'
' என்னோட இலை ரசத்தை அவர் இலைக்குத் திருப்பிட்டேன்..'



'இது கடைசி பந்தி இல்லையா?'
'ஏன் கேக்குறே..?'
'லட்டு உதிராமல் முமுசா இருக்கேன்னு கேட்டேன்..'

-ஏ.நாகராஜன், பம்மல்.

'இட்லி சாப்ட்டா இருக்குமா?'
'சாப்பிட்டா இட்லி இருக்காது. வயிற்றுக்குள்ளாற போயிடும்..'



'அந்த கஸ்டமர் ஏதோ கேட்டதும் சர்வர் ஏன் டென்ஷன் ஆகிட்டாரே? அவர் என்னதான் கேட்டார்?'
'சாப்பிட தனக்கு மாட்டுப் பொங்கல் கிடைக்குமான்னு...?'

-ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.

'இது எலக்ட்ரானிக் எருமை..'
'என்ன செய்யும்...'
'ஒரு வேளைக்கு எட்டு அரை லிட்டர் பால் பாக்கெட் கறக்கும்..'



'நாங்க டீ , காபி.. எதுவும் குடிக்கிறதில்லை..?'
'பரவாயில்லை. ஹார்லிக்ஸ் ஒரு கப் குடுங்க .. அது போதும்..'



'காக்கா மேல் உனக்கு என்ன கோபம் ஆயா?'
'வடை காசு தராமல் பாக்கி வச்சிருக்கு...'

-பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.