'என்னங்க.. ரோஸிங்கிறது யாருங்க?''
'அது குதிரைப் பந்தயத்தில் நான் பணம் கட்டும் குதிரையின் பெயர். ஏன் கேட்குறே..?''
'அப்படியா? அந்தக் குதிரை மதியம் உங்களுக்கு போன் பண்ணுச்சு. அதான் கேட்டேன்..''
'உங்க மனைவிக்கு மாதம் வர்ற ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை உங்களிடம் அப்படியே தந்து விடுவாளா?''
'ஆமாம். அவள் பணத்தை என்னிடம் தந்துவிட்டு என் சம்பளத்தை முழுசா வாங்கிக் கொள்கிறாள்.''
-ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
சென்னை.
'சமையல் கட்டில் போய் என்ன உருட்டிகிட்டு இருக்கீங்க?''
'மயக்கம் வர்ற மாதிரி இருந்தால் சர்க்கரை அளவை செக் பண்ண சொன்னாரு டாக்டர்..''
-பி.சிவசங்கரன்.
'ஹலோ சார். நான் உங்க மனைவி கலாவோட பிரண்டு உமா பேசறேன். கலா இருக்காளா?''
'அவள் புத்துணர்வு முகாம் போயிருக்கா..?''
'என்னது..''
'யோகா கிளாஸூக்கு போயிருக்காங்கம்மா..''
-கு.அருணாசலம்,
தென்காசி.
'இந்த மாதம் சம்பளம் கம்மி. செலவைக் குறைக்கணும் கமலா..''
'சரிங்க.. ஆபிஸூக்கு நடந்து போங்க..?''
-அ.செந்தில்குமார், சூலூர்.
'மனைவி ஊரில் இல்லாதபோது ஏன் சத்தம் போடறீங்க?''
''எனக்குத் தைரியம் இருக்கான்னு எனக்கு நானே டெஸ்ட் பண்ணிக்குவேன்..''
'இருட்டில் நடக்க பயமாங்க..?''
''நடக்காம? நின்னாலே பயம்தான்..''
-பர்வதவர்த்தினி,
பம்மல்.
'உங்க மனைவி கோபமா எங்கப் போறாங்க?''
'கோபத்தை அடக்க யோகா கிளாஸூக்கு போறா?''
'என்னங்க.. புயல் வர்ற போகுதாம்..''
'டி.வி.யில் சொன்னாங்களா?''
'ம். உங்க அம்மா ஊரில் இருந்து வர்றதே டி.வி.யில் வேற சொல்றாங்களா..?''
'பல் தேய்க்காம சமையல் ரூமில் என்ன பண்றே..?''
'ஊத்தப்பம் பண்றேன்ங்க..''
'என் மனைவிக்கு வயிறு ஒரே எரியுதாம்..''
'சரி அதுக்கு போய் ஏன் டாக்டர்கிட்ட போகாம நகைக் கடைக்கு கூட்டின்னு போறீங்க?''
'பக்கத்து வீட்டுக்காரி வைர நெக்ஸல் வாங்கிட்டான்னு அவளுக்கு வயிறு எரியுதுதான்..''
-தீபிகா சாரதி,
சென்னை.
'எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துட்டாபோதும். பக்கத்து வீட்டுக்காரங்க ஓடி வருவாங்க?''
'விலக்கி விடுவாங்களா?''
''நீங்க வேற.. ரெண்டு பேரையும் உசுப்பி விடுவாங்க?''
-வி.ரேவதி,
தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


