பேல் பூரி
""டி.வி.யில பட்டிமன்றம் நடக்குதே பார்க்கலையா?''""நான்தான் தினமும் எங்க வீட்டுல நடக்குற பட்டிமன்றத்தைப் பார்க்குறேனே''""எப்படி?''""என் மனைவியும் அம்மாவும் போடுற சண்டையை சொன்னேன்?''


(திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்)
""நெய்குப்பை''
-வரதன்,
திருவாரூர்.
(சிவகங்கை மாவட்டம்மதகுபட்டியில் உள்ள "ஹார்டுவேர்' கடையின் பெயர்)
"'நோ நேம்''
-இரா.தளவாய் நாராயணசாமி,
ஒக்கூர்.
(அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கிராமங்களின் பெயர்)
ஆமணக்கான்தோண்டி, கழுவந்தோண்டி.
-வீர.செல்வம்,
பந்தநல்லூர்.
(கோவை கடை வீதியில் உள்ள மளிகைக்கடையொன்றில் வியாபாரியும் இளைஞரும்..)
""அண்ணே. சாயங்காலம் நான்கு மணிக்கு பொருள் வாங்குறது முதல் வியாபாரமா? இப்படி பொய் சொல்றீங்க!''
""பொய் சொல்லலை. ஆறு மாசமாக விற்காத சேமியா பண்டலில் இருந்து முதல் பாக்கெட்டை எடுத்தேன். அதான் சொன்னேன்''
-ப.சிதம்பரமணி,
கோவை.
(திருவாரூர் கூட்டுறவு நகரில் இருவர்..)
""டி.வி.யில பட்டிமன்றம் நடக்குதே பார்க்கலையா?''
""நான்தான் தினமும் எங்க வீட்டுல நடக்குற பட்டிமன்றத்தைப் பார்க்குறேனே''
""எப்படி?''
""என் மனைவியும் அம்மாவும் போடுற சண்டையை சொன்னேன்?''
-மு.தனகோபாலன்,
திருவாரூர்.
(ஸ்ரீரங்கம் மேல சித்திர வீதியில் அதிகாலையில் சாணம் தெளித்துகொண்டிருந்த பாட்டியுடன் சிறுமி பேசியது)
""என்ன பாட்டி! சாணி தெளிக்கிறீங்களா..?''
""இது வெறும் சாணி இல்லை. கிருமிகளைக்கொல்லும் சாணிட்டைசரும்''
-சம்பத்குமாரி,
பொன்மலை.
ஈரமான இதயம் துரு பிடிப்பதில்லை.
-வி.ந.ஸ்ரீதரன்,
சிறுசேரி.
அந்த வங்கி மேலாளர் ஆரோக்கியசாமி ஏதோ யோசனையில் இருந்தார். அவரது அறைக்குள் வங்கி ஊழியர் ஆறுமுகம் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்து நின்றார்.
""என்ன ஆறுமுகம். சுரத்தே இல்லாம இருக்கே. குலதெய்வம் போயிட்டு வந்திருக்க. சந்தோஷமும் தெரியலையே''
""இப்படி திடீரென பக்கத்து ஊரு பேங்குக்கு மாத்திட்டாங்ளே சார். இப்பதான் கேஷியர் சொன்னாரு திக்குன்னு ஆயிருச்சி.''
""வேலைக்கு வந்திட்டா மேலிடத்துல எங்க சொன்னாலும் போயித்தானப்பா ஆகணும்.''
""மாற்றலைக் கேள்விபட்டதும் என் மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியலை சார். உங்க மனைவியும் கௌரவம் பார்க்காம, என் மனைவியிடம் பழகினாங்க? பிரிய வேண்டியிருக்கே சார். இனி அப்படிப்பட்ட பழக்கம்
கிடைக்குமா?''
""போற இடத்துல இதுக்கெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டியது தானேப்பா..?''
""நீங்க என்னத்தச் சொல்லுங்க. என் மனம் கேக்கல சார். உங்களை பிரிய
வேண்டியிருக்கு.''
"'உத்தியோகமுன்னா இப்படி மாறி மாறிப் போக வேண்டியதுதான்''
""உங்களைப் போல் கோபப்படாம, பொறுமையான மேனேஜரா இங்க வருவாங்களா? உங்களைப் போய் மாத்திட்டாங்களே சார்'' என்று ஆறுமுகம் கண்ணீர் வடித்தார்.
இதைக் கேட்ட மேலாளர் ஆரோக்கியசாமி, தனக்கு மாறுதலாகியதையறிந்து மனம் நொடிந்தார்.
-ஆதினமிளகி வீரசிகாமணி
சிரிக்கும்போது முகம் அழகு.
அன்பு காட்டும்போது மனம் அழகு.
நம்பிக்கை வைக்கும்போது வாழ்க்கை அழகு.
நீ நீயாக இருக்கும்போது எல்லாமே அழகு.
-எஸ்.கார்த்திக் ஆனந்த்,
காளனம்பட்டி.
எத்தனை கோடிகள் குடுத்து சொகுசு காரை வாங்கினாலும், அதில் அடிக்கப்பட்டிருக்கும் வண்ணம் மட்டும் இறுதி வரை மாறாது.
நீண்ட காலமாக இருந்து வந்த இந்தக் குறைக்கு, பிஎம்டபிள்யு கார் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது. பச்சோந்தியைப்போல் வண்ணம் மாறும் காரை அமெரிக்காவில் நடைபெற்றும் வரும் சிஇஎஸ் கண்காட்சியில் பிஎம்டபிள்யு அறிமுகம் செய்துள்ளது. கருப்பு, வெள்ளை முதல் 32 வண்ணங்களில் மனதுக்கு ஏற்ப மாற்றலாம்.
காருக்குள் அமர்ந்தபடி இந்த வண்ணங்களை தொடுதிரையில் மாற்றினால் காருக்கு வெளியே இது வெளிப்படும்.
அதுவும் காரின் வெளிப்புறத்தை 240 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் தனித் தனி வண்ணங்களை வெளிப்படுத்தலாம் என்பது, தான் இதன் சிறப்பம்சமாகும்.
காரின் சக்கரம் உள்பட சிறு வளைவுகளிலும் வண்ணங்கள் மாறுகிறது.
காரின் உள்புறத்திலும் வண்ணங்கள் மாறும் வகையிலும், காரின் கண்ணாடிகள் உள்பட ஓட்டுநர் முன் உள்ள பகுதி முழுவதும் நவீன டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால் வருங்கால கார் தொழில்நுட்பத்தில் இந்தக் கார் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
-அ.சர்ப்ஃராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...