டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிரி... சிரி...

"தாலி கட்டினதும் உன் காதுல பொண்ணு என்ன சொன்னது!''" நீங்க என் கட்டுப்பாட்டுல வந்துட்டீங்கன்னு சொன்னா''

News image
Updated On :15 ஜனவரி 2023, 12:30 am

DIN


"பாட்டு பாடற மனைவி வந்தப்புறம் நீயும் பாடறியாமே...''
"எந்தப் பாட்டுடா?''
"பின்பாட்டுதான்!''



"விருச்சிக ராசிக்காரியை ஏம்மா கல்யாணம் பண்ணி வெச்சிங்க..?''
"என்னடா சொல்ற?''
"தொட்டதுக்கெல்லாம் தேளா கொட்டுறாளே!''

-நா.கி.மூர்த்தி,
சென்னை.



"உங்க கணவருக்கு சுத்தமா எதிர்ப்புச் சக்தியே இல்லை''
"அதுக்கு ஏன் டெஸ்ட் பண்ணிணீங்க!  என்னைக் கேட்டா நானே சொல்லியிருப்பேனே!''



"தாலி கட்டினதும் உன் காதுல பொண்ணு என்ன சொன்னது!''
" நீங்க என் கட்டுப்பாட்டுல வந்துட்டீங்கன்னு சொன்னா''

-பொன்.பாலாஜி, 
அண்ணாமலை நகர்.



"கமலா. என்ன டிபன் இது?''
"மிளகு இருந்தால் பொங்கல். 
கடலைப்பருப்பு இருந்தால் உப்புமா..''

-பி.கவிதா,
சிதம்பரம்.



"என்னங்க இது? தோசையில ஏதோ ஸ்டிக்கர் ஒட்டின மாதிரி இருக்கே?''
" அதுலே மாவு  அரைச்ச நாள் போட்டிருக்கோம்!''

-பி.என்.நரசிம்மமூர்த்தி, 
பழைய பல்லாவரம்.

"இப்படி அந்தி சாயுற நேரத்துல வாசல் கதவை அடைச்சி வெச்சா லட்சுமி எப்படி வருவா?''
" கதவை திறந்து வெச்சா கொசுதான் வருது. இருக்கிற லட்சுமியும் டாக்டர்கிட்ட போயிடும் அத்தே..!''



"உனக்கென்ன சம்பளம்? உன் மனைவிக்கென்ன சம்பளம்/''
" ரெண்டு பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம்''
"அப்ப சம்பளத்துல சமபலமுன்னு சொல்லு!''

-கி.வாசுதேவன்,
தஞ்சாவூர்.



"இந்தப் புடவையில நீ ரொம்ப அழகா இருக்கே!''
" இது என் தங்கச்சி புடவைங்க..''
" ஓ. நீயா..?''



"என்ன உங்க மனைவி ராத்திரி 12 மணிக்கு சமையல் பண்றாங்க..''
"அந்த நேரத்துலதான் டி.வி.யில எந்த சீரியலும் இல்லை.''



"எங்க வீட்டுல டி.வி.யே போடறதில்லை..!''
"ஏன்?''
" டி.வி.யில மெகா சீரியலைப் பார்த்தா எங்க அம்மா அழுறாங்க! நீயூஸை பார்த்தா எங்க அப்பா அழுவுறாரு?''

- தீபிகா சாரதி,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.