பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் "சர்க்கஸ்'. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட ரோஹித் ஷெட்டி பாலிவுட் திரையுலகம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
"நாம் நினைத்தால் நிறைய மாற்றங்களை பாலிவுட்டில் கொண்டுவர முடியும். ஆனால் நாம் ஒருபோதும் ஒன்றுபடுவதில்லை. 150 கோடிமக்களில் 10 கோடி மக்களை கூட நம்மால் சென்றடைய முடிவதில்லை. தியேட்டர் வியாபாரத்தை எப்படி அதிகரிப்பது, அரசாங்கத்துடன் இணைந்து எப்படிப் பணியாற்றுவது போன்ற சில விஷயங்கள் குறித்து நாம் சிந்திப்பதில்லை. கலாச்சார ஒற்றுமை என்பதும் இங்கு இல்லை'' என்று பாலிவுட் திரையுலகம் குறித்து தெரிவித்திருக்கிறார்.
-------------------------------------------------
விஜய் சேதுபதி தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகியிருக்கும் "ஜவான்' படத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ளனர். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஷாருக்கானைச் சந்தித்தது குறித்தும், அவருடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்தும் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.
"ஆஸ்திரேலியாவில் நடந்த மெல்போர்ன் திரைப்பட விழாவில்தான் முதன் முதலில் ஷாருக்கானைச் சந்தித்தேன். நான் இதற்கு முன் அவரை சந்தித்ததில்லை. முதல் சந்திப்பிலேயே அவர் என்னைப் பாராட்டியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்தச் சந்திப்பிற்குப் பின் நான் மீண்டும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தில்தான் ஷாருக்கானைச் சந்தித்தேன். அப்போது நான் உங்களுக்கு வில்லனாக இருக்க விரும்புகிறேன். அதை நடத்திக் காட்டியிருக்கிறார்'' என்று பகிர்ந்துள்ளார்.
-------------------------------------------------
கிருஷ்ணன் அவதார், அண்டோலன் உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்தவர் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி. சோமி அலியும், பாலிவுட் நடிகர் சல்மான் கானும் 1991 முதல் 1999-ஆ ம் ஆண்டு வரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துள்ளனர்.
இந்நிலையில் சல்மான்கானுடன் இருந்த அந்த எட்டு வருடமும் தனக்கு நரகமான காலமாக இருந்ததது என்று குற்றம்சாட்டி இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், " சல்மான் கான் உடனான எட்டு ஆண்டு கால வாழ்க்கை மிகவும் மோசமானவை. ஒரு நாளும் அவர் என்னை மதித்ததில்லை. என்னை குறைத்து மதிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொது இடங்களில் என்னை அவரின் காதலி என அடையாளம் காட்டியதில்லை'' என்று கூறியுள்ளார்.
-------------------------------------------------
விஷ்ணு விஷால் - ராம்குமார் கூட்டணி மீண்டும் இணைகிறது. "முண்டாசுப்பட்டி', ராட்சன் படங்களுக்குப்பின் இந்தக் கூட்டணி இணைகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம், பெரிய பட்ஜெட்டில் நகைச்சுவையுடன் கூடிய காதல் கதையை ஃபேண்டஸி கலந்து சொல்லும் படமாக இருக்கும். இந்த வெற்றிகரமான காம்போவின் இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால், இந்த படம் அதன் ஹாட்ரிக் வெற்றியை நிறைவு செய்யும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


