கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிரி... சிரி...

வர் போலி மருத்துவர்தான்னு எப்படி சொல்றே?''வெளிநாடுகளில் போய் நாட்டு வைத்தியம் படிச்சிட்டு வந்ததா சொல்லிக்கிறாரே?'

News image
Updated On :22 ஜூலை 2023, 6:30 pm

DIN


வர் போலி மருத்துவர்தான்னு எப்படி சொல்றே?'
'வெளிநாடுகளில் போய் நாட்டு வைத்தியம் படிச்சிட்டு வந்ததா சொல்லிக்கிறாரே?'

கி.வாசுதேவன்,
தஞ்சை

'டாக்டர். என் வயிற்றில் ஒரு போர் நடக்கிற மாதிரி இருக்கே?'
' ஏங்க அக்கப் போர் பண்றீங்க?'

மு.பெரியசாமி,
விட்டுக்கட்டி.

'இந்த ஒரு மாத்திரையில பத்து கீரைக்கட்டுல இருக்கிற சத்து இருக்கு!'
'பத்து கட்டு கீரையை ஒரேடியா சாப்பிட்டா செரிமானம் ஆகுமா டாக்டர்!'

என்.கே.மூர்த்தி,
சென்னை.

'ஆபரேஷனுக்கு பிறகு  வலி இருக்கிறதே டாக்டர்!'
'நான் ஆபரேஷன் பண்ணின யாருமே ஆபரேஷனுக்கு பிறகு வலிக்குதுன்னு சொன்னதே இல்லை!'



'உங்களுக்கு நெஞ்சில் கோழை அதிகமாக உள்ளது  மன்னா!'
'கபம் என்று சொல்லுங்க வைத்தியரே!'



'உடம்புல கொழுப்பு அதிகமாக இருக்குன்னு பிளட் டெஸ்ட் பண்ணாமலே எப்படி சொல்றீங்க டாக்டர்!'
'உங்களோட பேச்சிலே கண்டுபிடிச்சேன்!'



'மாத்திரையே போதும்னு டாக்டர் சொல்லியும் எதுக்கு ஊசி குத்த சொல்றீங்க..!'
'இல்லீங்க நர்ஸ்.. நீங்க தடவி விடுவீங்களே அதான்!'




'இடம் மாறி படுத்தா எனக்கு தூக்கமே வராது டாக்டர்!'
'அப்படியா?'
'அதனால்தான் எங்க ஆபிஸில் டிரான்ஸ்பருக்கு பயந்து பிரமோஷனையே வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.'

-வி.ரேவதி,
தஞ்சை.

'அந்த டாக்டருக்கு குழந்தை மனசா?'
'பீஸூக்கு பதிலாக சாக்லெட்டுகள் கொடுத்தால் போதுமாம்!'



'ஆபரேஷன் பண்ணா உங்க மாமியார் உடம்பு தாங்காது!'
'தெரியும் டாக்டர்.  அதனால்தான் பண்ண சொல்றேன்!'



'நீங்க ஏன் கண்ணை மூடினு விஸ்கியை மடக், மடக்னு குடிக்கறீங்க ?'
'டாக்டர்தான் என்னை குடியை கண்ணால பார்க்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு!'



'கவுன்சிலரு ஏன் இந்தப் படை போதுமான்னு கோஷம் போட்டுனு எங்க போறாரு ?'
'ஸ்கின் டாக்டர் வீட்டுக்கு போறாரு !'



'டாக்டர் என் கையால உங்களுக்கு பீஸ் கொடுக்கணும்னு ஆசை !'
'அப்ப ஆபரேஷனுக்கு முன்னாடி பீஸை கொடுத்துடுங்க !'



'நீங்கதானே டாக்டர் சொன்னீங்க? அரிசி பொறி சாப்பிட்டால் நல்லா பசி எடுக்கும்னு!'
'ஆமாம். அதுக்காக ஒரு மூட்டை அரிசி பொறி சாப்பிட்டா எப்படி பசிக்கும்!'



'என் கணவர் தூக்கத்துல டி.வி. போடுறாரு டாக்டர்'
'சரி இதுக்கு போய் ஏன் ரொம்ப வருத்தப்படறீங்க?'
'அவரு தூக்கத்தில் டி.வி. போடுறது மாடியிலிருந்து டாக்டர்..!'

தீபிகா சாரதி,
சென்னை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.