வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

""என்னோட காதலன்  ரொம்ப பொறுப்புள்ளவன்டீ.  3 தங்கச்சிக்கும்  கல்யாணம்   முடித்த பிறகுதான் அவனோட  மேரேஜ்னு சொல்றான்டீ !'' ""ஜாக்கிரதைடீ ! உன்னோட கல்யாணத்தையும் முடிச்சிட்டுதான் மேரேஜ்னு சொல்லிடப்போறான்!

News image
Updated On :12 மார்ச் 2023, 12:30 am

""வயசானவங்களைத்தான் கரோனா ஈசியா தாக்குமுன்னு சொல்றது உண்மை இல்லடீ''
"" எப்படிங்க சொல்றே?''
""40-வயசான எனக்கு கரோனா வந்திருக்கு. ஆனா  70  வயசைத் தாண்டின என் மாமியாரை கரோனாவால எதுவும் செய்ய முடியலையே!"



""என்னோட காதலன்  ரொம்ப பொறுப்புள்ளவன்டீ.  3 தங்கச்சிக்கும் 
கல்யாணம்   முடித்த பிறகுதான் அவனோட  மேரேஜ்னு சொல்றான்டீ !''
""ஜாக்கிரதைடீ ! உன்னோட கல்யாணத்தையும் முடிச்சிட்டுதான் மேரேஜ்னு சொல்லிடப்போறான்!''




""டாக்டர். என் மனைவி என்னை எப்பவும் தூக்கி எறிந்து பேசுறா?''
""வெயிட் போட டானிக் எழுதித் தர்றேன். 3 மாதத்துக்கு சாப்பிடுங்க?''




""நமக்குள்ள கருத்து வேற்றுமையே வரக் கூடாது டார்லிங்!''
""என்னோட கருத்தே  உங்க கருத்தாவும் இருந்துட்டா  கருத்து வேற்றுமைக்கு ஏது இடம்?''

-கி .வாசுதேவன்,
தஞ்சை.

""மிச்சமுள்ள சாப்பாட்டை  இரண்டு பங்கா பிரிச்சிருக்கே! யார், யாருக்கு!''
""ஒன்று பிச்சைக்காரனுக்கு, இன்னொன்று திருடனுக்குங்க..!''




""வேலை பார்க்கிற பொண்ணு வேண்டாமுன்னு ஏன் சொல்றே?''
""அவளோட ஆபிஸ் வேலையையும் சேர்த்து நான் தானே, பார்த்தாகணும்!''




""உங்க பையன் படிச்சு முடிச்சு கமிஷன் மண்டி வைப்பான்!''
""கடைக்குப் போக கமிஷன் கேட்கிறானே!''

-அ.சுஹைல் ரஹ்மான்,
திருச்சி.

""கமலா. வரப்போற பண்டிகைக்கு உன் கையைத் தான் நம்பியிருக்கேன்.''
"" என் கையில் என்ன இருக்கு!''
""அப்படி சொல்லாதே.  இரண்டு தங்க வளையல் இருக்கே!''





""அவன் குடிச்சிருந்தா நல்லா  இங்கிலீஷ் பேசுவான்டி?''
""எப்படிங்க..?''
""தங்கராஜ் என்ற என் பெயரை  "கோல்ட் கிங்'-ன்னு சொல்லுவான்.''

-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.

""உலகம் உருண்டைன்னு சொன்னது கரெக்ட்தான்டீ!''
""எப்படி சொல்றீங்க..!''
""நான் எந்தப் பக்கம் போனாலும், கடன்காரன்கிட்டே மாட்டிக்கிறேனே!''





""நீங்க எதுக்கு என் தங்கைக்கு புடவை வாங்கித் தந்தீங்க..!''
""நீதானே இந்தப் புடவை அழகுக்கு அழகு சேர்க்குமுன்னு சொன்னே?''





""நீ வீட்டோட வேலைக்காரிய 
வர்றீயா?''
"" வீடு இருந்தா நான் ஏம்மா வேலைக்காரியா இருக்கேன்!''
 




""தோசை மாவு மிக்ஸியில் அரைச்சா நல்லா இருக்குமா? கிரைண்டரில் அரைச்சா நல்லா இருக்குமா?''
""இல்லடீ. எனக்குஎன் கணவர் அரைச்சாதான் நல்லா இருக்கும்!''

-தீபிகா சாரதி,
சென்னை.

"புதுசா வந்த மருமகள்.. எப்படி வீட்டு வேலை செய்யுறா?''
""நான் செய்யுறத.. அவ நல்லா வேடிக்கை பாக்குறா!''





""வாத்தியாரை கல்யாணம் செஞ்சு கிட்டீயே... எப்படி இருக்கே?''
"" தப்பு செஞ்சா..வாசல்ல பெஞ்சியில.நிக்க சொல்றாரு... இல்லேனா தோப்பு 
கரணம் போடச் சொல்றாரு!''

-ஜ. லட்சுமி மணிவண்ணன்,
நாகை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.