வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

''ஏன்டா இந்தக் கடிகாரம் நின்னு நின்னு ஓடுது?''''ஓட்டத்தின் இடையே கொஞ்சம் இளைப்பாறுதுடா!''

News image
Updated On :14 அக்டோபர் 2023, 6:30 pm


''ஏன்டா இந்தக் கடிகாரம் நின்னு நின்னு ஓடுது?''
''ஓட்டத்தின் இடையே கொஞ்சம் இளைப்பாறுதுடா!''

-ஏ.நாகராஜன்,  பம்மல்.

''ஏன்டா?   ஆபிஸில் உன்னை யாருக்குமே பிடிக்காதா? ரொம்ப வம்பு பண்ணுவீயோ?''
''கரெக்ட் டைமுக்கு ஆபிஸ் போறேன்.  லஞ்சம் வாங்க மாட்டேன். அதான்டா...''

-கு.அருணாசலம், தென்காசி.

''ஏன்டா. நாடி ஜோதிடர் என்றாய்; ஓலைச்சுவடிகளைக் காணோம்?''
''கை நாடி பார்த்து ஜோதிடம் சொல்பவர் இவர்..''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

''அந்தப் படத்தில் டைட்டிலில் கதைங்கிற இடத்துல துப்பாக்கியை காண்பிக்கிறாங்க..?''
''அது சுட்ட கதையாம்..''



''நீங்க  ஏன் அறுந்த செருப்பா பார்த்து திருடி போடறீங்க?''
''நல்ல செருப்பா போட்டுன்னு போனா என்னோடதையே திருடறாங்களே?''

-தீபிகா சாரதி, சென்னை.

''நைட்டு 12 மணிக்கு திடீர்ன்னு பதறிப் போய் முழிச்சேன்?''
''ஏன் என்ன ஆச்சு..!''
''நான் தூங்கிட்டிருந்தது ஆபிஸ்ல..?''



''சிறந்த டி.வி. சீரியல் விருது எதை பார்த்து கொடுக்கிறாங்க..?''
''எந்த சீரியல் அதிக குடும்பங்களை பிரிச்சதுன்னு பார்த்துதான்!''



''அவர் கல்யாண முருங்கையை ஏன் வளர்க்க மாட்டேன்னு சொல்றாரு?''
'' அவர் கட்டை பிரம்மச்சாரியாம்..''



''பேங்க் லோனில் மாடு வாங்கியது தப்பா போச்சுடா..''
'' ஏன் என்ன ஆச்சு..?''
''லோன் கட்டலைன்னா பால் தர மாட்டேங்குது..''

-அ.செந்தில்குமார், சூலூர்.

''கடன் கொடுக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க? அதை சிரித்த முகத்தோடு கொடுங்களேன் சார்..!''
'' எதுக்கு இளிச்சவாயன்னு பட்டம் சூட்டவா?''



''அவன் குடிகாரன்தான். ஆனா ரொம்ப நல்லவன்..''
''எப்படி சொல்றே..?''
''சரக்கடிச்சிட்டு பஸ்ஸில் போகும்போது, அவன் தனக்கே ரெண்டு டிக்கெட் வாங்குவான். அதான்!''



''என் மனைவி என்னை மதிக்கறதே இல்லை சார்..''
''ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். எனக்கு 
கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்குதுன்னு...?''



''என் பையனுக்கு 25 வயசாகுதே! யார் எது சொன்னாலும் அதை மதிக்கவே மாட்டேங்குறான்..''
''அவனுக்கு உடனே ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க. சரியாகிடுவான்..''



''வாழ்க்கையில் யாராச்சும் ஒருத்தர்கிட்டேயாவது ஒரு மனுஷனுக்கு பயம் இருந்தால்தான் அவன் முன்னேறுவான்.''
''அதுதான். உன் மகனுக்கு சீக்கிரமே கல்யாணம்  செஞ்சுட்டியா..?''

-வி.ரேவதி, தஞ்சை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.