திரைக்கதிர்

பாலிவுட்டில் "லெட்டர்ஸ் டு மிஸ்டர் கண்ணா' என்ற படத்தை முடித்துவிட்ட திருப்தி... கைவசம் கன்னடம், தமிழ் என அடுத்தடுத்து படங்கள் வரிசைகட்டி நிற்கும் சந்தோஷம்...
திரைக்கதிர்
Updated on
1 min read

பாலிவுட்டில் "லெட்டர்ஸ் டு மிஸ்டர் கண்ணா' என்ற படத்தை முடித்துவிட்ட திருப்தி... கைவசம் கன்னடம், தமிழ் என அடுத்தடுத்து படங்கள் வரிசைகட்டி நிற்கும் சந்தோஷம்...  இதையெல்லாம் அள்ளிச் சாப்பிடுகிற அட்ராசிட்டி உற்சாகத்தில் இருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் திரைக்கு வந்த "இறுகப்பற்று'வில் மித்ராவாக ஹை-ஸ்கோர் செய்ததன் பாதிப்பு இது. தமிழின் மீது இறுகப்பற்றிருக்கும் ஷ்ரத்தா, பேட்டி என்றாலே எப்போதும் ஆங்கிலத்தில் பிச்சு உதறுபவர், இப்போதெல்லாம் அழகு தமிழில் சரளமாக அசத்துகிறார்.

----------------------------------------------

கதைகளைத் தேர்ந்தெடுப்பதில், பொறுமையைக் கடைப்பிடிக்கிறார் துஷாரா விஜயன். வசந்தபாலனின் "அநீதி'க்குப் பிறகு தனுஷின்  "டி50'-ல் நடித்து வரும் துஷாரா, இப்போது ரஜினி - த.செ.ஞானவேலின் "தலைவர் 170' படத்திலும் கமிட் ஆகிவிட்டார். ஆசை ஆசையாய் செல்ல நாய்க்குட்டி ஒன்றையும் வளர்த்து வருகிறார். அதன் பெயர் ஷரே.' துஷாரா இருக்கும் இடத்தில் ஷரே'யும் ஆஜராகிவிடுகிறது.

----------------------------------------------

கமல் "பிக் பாஸ்' அரங்கத்துக்குள் நுழைந்து விட்டதால், அடுத்த மூன்று மாதங்களுக்கு அவரிடம் தேதி வாங்க முடியாது எனத் தெரிந்து, திரைக்கதையைச் சரி செய்யும் வேலைகளில் தீவிரமாகிவிட்டார் இயக்குநர் அ.வினோத். அடுத்த வருடம் ஜனவரி தொடக்கத்திலேயே கமல் - மணிரத்னம் இணையும் படத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டதாம். "பிக் பாஸ்' பிளான் நீள்வதால், இந்தத் திட்டம் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறதாம். இந்தப் படத்தை மல்டி ஸ்டார்ஸ் படமாக பிளான் பண்ணுவதால், கமல் தேதியைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற ஆள்களை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக இருக்கிறார் மணிரத்னம்.

----------------------------------------------

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியடையச் செய்திருந்தது. விஜய் ஆண்டனி தன் மகளின் இறப்பு குறித்து சமீபத்தில் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் "நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை' என விஜய் ஆண்டனியின் மனைவியும் தயாரிப்பாளருமான ஃபாத்திமா விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவு ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.  அவர் வெளியிட்டிருந்த பதிவில், ""எங்களுடன் நீ 16 வருடங்கள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும் நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com