சிரி...  சிரி...

'எதிர்வீட்டம்மாவோட ஜாக்கிரதையா பேசு...''எதுக்குங்கோ..?''அந்தம்மா உன் மாமியாரோட பி டீம்...'
சிரி...  சிரி...


'ஏ'உன் தொல்லை தாங்காம யாருக்கும் தெரியாம எங்கேயாவது ஓடிப் போகலாமுன்னு உங்க அப்பாகிட்ட சொன்னேன்பா...'
'என்ன சொன்னாருங்க?'
'போகும்போது சொல்லுங்க. நானும் வர்றேன்னு சொன்னாரு?'

-கி.வாசுதேவன்,
தஞ்சை.

'அன்பே உன் சந்தோஷம் தான் என்னோட சந்தோஷமும்..'
'அப்போ வாங்க நகைக்கடைக்கு போகலாம்..'

தீபிகா சாரதி,
சென்னை.

'பக்கத்து வீட்டுக்காரிகிட்டே சண்டை போடாதடி?'
'ஏன்...'
'அவதானே கேக்கறப்ப காபி பொடி கொடுக்கிறா?'

-------------------------------------------------------------------------

'ஆயிரம் ரூபாய் குடுத்து இந்தக் கிளியை ஏன்டி வாங்கினே?'
'இந்தக் கிளி அக்கம்பக்கம் வீட்டிலே சண்டைன்னா போய் பார்த்துட்டு வந்து சொல்லுமாங்க..'

-------------------------------------------------------------------------

'எனக்கு சட்டை வாங்கினியே.. உனக்கு சேலை வாங்கினியா?'
'நாலு சேலை வாங்கினால் ஒரு சட்டை இலவசமுன்னு சொன்னதால்தான் சட்டை வாங்கினேங்க..?'

அ.செந்தில்குமார்,
சூலூர்.


'எதிர்வீட்டம்மாவோட ஜாக்கிரதையா பேசு...'
'எதுக்குங்கோ..?'
'அந்தம்மா உன் மாமியாரோட பி டீம்...'

-------------------------------------------------------------------------

'ஏன்டி.. ரசவடை ஸ்பூன் ஏன் இப்படி வளையுது?'
'வடையோட ஸ்பூனும் ஊறிப் போச்சுங்க..?'

-------------------------------------------------------------------------

'என்னங்க..எள்ளுப்பொடி என்ன விலைக்கு வாங்கி வந்தீங்க..?'
'தள்ளுபடி விலையில்தான் வாங்கினேன்..'

பர்வர்தவர்த்தினி,
ம்மல்.

'நீ  திடீர்ன்னு குண்டாயிட்ட மாதிரி கனவு கண்டேன் சரசு..'
'வேற நல்ல கனவே வராதய்யா உனக்கு..'
'கனவில் கூட உன்னை குறைச்சலா எடை போட முடியலை பாரு..'

-------------------------------------------------------------------------

'எல்லா வேலையும் செய்யக் கூடிய பொறுமையும், சகிப்புத்தன்மையும் நிறைய உள்ள பையனா நம்ப பொண்ணுக்கு பார்க்கணுங்க..?'
'அப்போ வீட்டோட மாப்பிளையா பார்க்கணுமுன்னு சொல்லு..'

-------------------------------------------------------------------------

'அடுத்த பிறவின்னு வந்தா  நீங்க யாரோட புருஷனா இருக்கணும்னு கடவுளிடம் வேண்டிப்பீங்க..?'
'நீ எனக்கு புருஷனாகவும், நான் உனக்கு மனைவியாகவும் வரணும்னு வேண்டிக்குவேன்..'

-------------------------------------------------------------------------

'கண்ணை மூடேன். நான் உனக்கு சர்ப்ரைஸ் காட்டுறேன்..'
'ஏன். என்கிட்டே இருந்து தப்பி ஓடுறதுக்கா...?'

-------------------------------------------------------------------------


'என் ராசிக்கு பண கொட்டப் போகுதுன்னு இருந்திச்சி. அப்படியே ஆகிடுச்சு..'
'என்னங்க. எவ்ளோ வருமானம். வாங்க நகைக்கடைக்கு போகலாம்!'
'அடி போடி.  பேண்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் விழுந்து பணம் போயிடுச்சி..'

-வி.ரேவதி,
தஞ்சை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com