"கங்குவா' படத்தை முடித்துவிட்டு, வெற்றிமாறனுடன் கைகோப்பார் சூர்யா என பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வெற்றிமாறன் இன்னமும் "விடுதலை பார்ட்-2' படத்தின் பணிகளையே முடிக்காததால் கலைப்புலி தாணு - சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியின் "வாடிவாசல்' ஷூட்டிங் அடுத்த வருடத்துக்குத் தள்ளிப்போயிருக்கிறது. இந்த இடைவெளியில், "சூரரைப் போற்று' சுதா கொங்கராவின் அடுத்த புராஜெக்டை ஓ.கே. செய்திருக்கிறார் சூர்யா.
---------------------------------------
தான் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூரில் உள்ள பேருந்து பணிமனைக்கு திடீர் விசிட் அடித்திருக்கிறார் ரஜினி. சிவாஜி ராவாக அங்கு பணியாற்றிய நினைவுகளை நெகிழ்ச்சியோடு அங்குப் பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமின்றி தனது நண்பரான ராஜ் பகதூரையும் அழைத்துச் சென்று மலரும் நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார். மேலும் அங்கிருந்த பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுடன் தற்படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறார். இது தொடர்பான படங்களும், விடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
---------------------------------------
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லண்டனில் திரைக்கதை எழுதுவது குறித்து படித்து வந்தார். இந்நிலையில் அவர் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படத்தை தயாரிக்க இருப்பதாக லைகா தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.அதிகாரப்பூர்வமாக லைகா தயாரிப்பு நிறுவனம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை தாங்கள் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த படம் குறித்து அறிவித்திருந்த தயாரிப்பு நிறுவனம், ஜேசன் விஜய் சொன்ன கதை சுவாரஸ்யமாக இருந்தது எனவும், படத்தில் பணிபுரியும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.
---------------------------------------
"யார் சூப்பர் ஸ்டார்?' என்கிற கேள்வி "நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்கப்பட, "இன்று ரஜினி, அடுத்து விஜய், நாளை சிவகார்த்திகேயன்' என்று பதில் சொன்னார். இதன் மூலமாக சூப்பர் ஸ்டார் ரேஸில் சிவகார்த்திகேயனையும் இழுத்துவிட்டு கோடம்பாக்கம் தீயில் கூடுதலாக எண்ணெயை ஊற்றிவிட்டிருக்கிறார் சீமான். ஆனால், இதை சிவகார்த்திகேயன் கொஞ்சமும் ரசிக்கவில்லையாம். சீமானின் வார்த்தைகள் ஆன்லைனில் விடியோ பதிவாகப் பரப்பப்பட, அதை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டாராம் சிவகார்த்திகேயன். யார் மனதையும் புண்படுத்திவிடக் கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறாராம் சிவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப். 28 வரை மழைக்கு வாய்ப்பு

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


