ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரைக் கதிர்

இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ஒரு உன்மையான சிங்கத்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்துக்கு "மாம்போ' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

News image
நடிகர்
Updated On :3 ஆகஸ்ட் 2024, 6:30 pm

DIN

இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ஒரு உன்மையான சிங்கத்தை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்துக்கு "மாம்போ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. உன்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்படும் முதல் ஆசியத் திரைப்படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமாரின் மகனான விஜய் ஸ்ரீ ஹரி நடிக்கிறார். பிரபு சாலமனின் மகன் சாமுவேல் சஞ்சய் இத்திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். டி.இமான் இசையில் பாடல்கள் உருவாக்கம் நடைபெற்று வருகின்றன.

----------------------------------------------------------------------------------------------

இயக்குநர் பிரசாந்த் வர்மாவுடன் ஒரு திரைப்படம், இயக்குநர் ஷங்கருடன் அந்நியன் ஹிந்தி ரீமேக் எனப் பலமான லைன் அப்பை தனது கைவசம் வைத்திருந்தார் ரன்வீர் சிங். ஆனால், இந்த ப்ராஜெக்ட்கள் இரண்டும் கைவிடப்பட்டன. இந்நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ரன்வீர் சிங். பாலிவுட்டில் பிரபலமடைந்த இயக்குநர் ஆதித்யா தருடன் இணையவிருக்கிறார். இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

ரஞ்சித்தின் "அட்டகத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன், இப்போது 50 படங்களைக் கடந்துவிட்டார். அடுத்து மாரிசெல்வராஜின், "வாழை' படத்திற்கு இசையமைத்துள்ளார். ""இங்கிருக்கும் கலைஞர்கள் எல்லோரும் மக்களிடம் தாக்கத்தை உண்டு பண்ணும் கலைஞர்களாக வளர்ந்திருக்கிறோம். கலை மூலம் மிகச் சிறந்த படைப்புகளை உங்களுக்குத் தருவோம். 50 படங்களை நான் கடந்திருக்கிறேன். நீங்கள் தந்துவரும் ஆதரவிற்கு நன்றி'' என நெகிழ்கிறார் சந்தோஷ்.

----------------------------------------------------------------------------------------------

வீர தீர சூரன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்த படத்திற்கான கதைகளைக் கேட்டு வருகிறார் விக்ரம். "மெளனகுரு', "மகாமுனி', "ரசவாதி' ஆகிய படங்களை இயக்கிய சாந்தகுமார், விக்ரமிடம் ஒரு லைன் ஒன்றைச் சொல்லியிருக்கிறார். தரணியின் உதவியாளராக இருந்த போது விக்ரமின் "தில்', "தூள்' படங்களில் இவர் வேலை செய்திருப்பதால், விக்ரமின் குட்புக்கில் இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். சாந்தகுமார் தவிர, இளம் இயக்குநர்கள் சிலரிடமும் கதைகள் கேட்கவிருக்கிறார் விக்ரம். அனேகமாக அடுத்த மாத இறுதியில் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யாரெனத் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.