பிரபல இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். தமிழ், தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவில் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டவர்.
தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.
இந்த நிலையில், சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது, இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தன் 94-வது வயதில் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் திரைப்படம் இயக்கவுள்ளது இந்தியளவில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.