ஜன நாயகன் வெளியாகாது என நினைத்தேன்: விஜய்

ஜன நாயகன் திரைப்படம் குறித்து...
vijay
விஜய்
Updated on
1 min read

நடிகர் விஜய் ஜன நாயகன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் கடந்த ஜன. 9 ஆம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், இறுதிக்கட்ட தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வெளியீட்டிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது.

இதனால், ரூ. 500 கோடி முதலீடு பாதிப்பைச் சந்தித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் தெரிவித்திருந்தது. பிப்ரவரி வெளியீடாகத் திரைக்கு வரவில்லை என்றால் தேர்தல் காரணங்களால் சில மாதங்கள் தள்ளிச்செல்லவே வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், பிரபல ஆங்கில ஊடகத்திற்கு நேர்காணல் அளித்த நடிகர் விஜய், “ஜன நாயகன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகாது என நானும் நினைத்திருந்தேன். என் அரசியல் வருகைதான் அதற்குக் காரணமாகவும் அமைந்திருக்கிறது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளரை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளாராம்.

மேலும், தன் அரசியல் வருகை குறித்தும் நீண்ட நேர்காணலை அளித்திருப்பதாகத் தெரிகிறது.

vijay
தனியறையில் அத்துமீறிய புகைப்படக் கலைஞர்... கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!
Summary

actor vijay spokes about jana nayagan release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com