

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
ஒரு புகைப்படக் கலைஞர் தன்னுடைய உடலைப் பார்க்க வேண்டுமென செய்த செயல் மிகவும் வருத்தமளித்ததாக பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை, ரம்மி, கனா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தார்.
அவரது ‘டிரைவர் ஜமுனா’, ஃபர்ஹானா, புலிமடா, தீராக் காதல் ஆகிய திரைப்படங்கள் அவருக்கென தனியான ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு இரண்டு படங்களுக்கு (வட சென்னை, கனா) தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
தவறாக நடந்துகொண்ட புகைப்படக் கலைஞர்
இந்நிலையில், தெலுங்கு பாட் காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:
நான் மிகவும் இளம் வயதில் எனது சகோதரனுடன் ஆடிஷனுக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த புகைப்படக் கலைஞர் எனது சகோதரனை வெளியே அமர வைத்து, என்னை அறையினுள் அழைத்தார்.
என்னிடம் பிகினி உடையைக் கொடுத்து, “உனது உடலைப் பார்க்க வேண்டும், அணிந்து வா” எனக் கூறினார். அந்த சமயத்தில் எனக்கு சினிமா துறையைப் பற்றின புரிதல் பெரிதாக இல்லை. அப்படித்தான் வாழ்க்கை சென்றது.
நானும் ஓரளவுக்கு சமாதானம் ஆகிவிட்டேன்; ஆனாலும் இல்லை. அவர் இன்னும் கூடுதலாக 2 நிமிஷங்கள் தொடர்ந்திருந்தால், நானும் செய்திருப்பேன்.
இயக்குநரின் மோசமான செயல்
எனக்கு ஏதோ தவறாகப் பட்டதால், எனது சகோதரின் அனுமதி கேட்க வேண்டுமென அறையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
எவ்வளவு பெண்களை அவன் இந்தமாதிரி செய்தான் எனத் தெரியவில்லை? எனது சகோதரரிடம் சொல்லுமளவுக்கு எனக்கு அப்போது தைரியமில்லை.
ஒருமுறை நான் தாமதமாக வந்தேன் என்பதற்காக துணை நடிகர்கள் முன்பாக இயக்குநர் என்னை வேண்டுமென்றே திட்டினார். பல நடிகைகளுடன் ஒப்பிட்டும் பேசினார்.
தவறே செய்தாலும், யாரையும் இந்த மாதிரி அசிங்கப்படுத்தக் கூடாது என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
சினிமா துறையில் பெண்கள் சுரண்டப்படுவது இன்னும் தீரவில்லையா என சமூக வலைதளத்தில் இது குறித்து பேசி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.