'ஜாகிர் பாய் ஒரு இன்ஸ்பிரேஷன். தபேலா இசையை உலகளாவிய புகழுக்கு உயர்த்திய ஓர் ஆளுமை. அவரது இழப்பு நம் அனைவராலும் அளவிட முடியாதது. தசாப்தங்களுக்கு முன்பு நாங்கள் சேர்ந்து பணியாற்றியதைப் போல், சமீப காலங்களில் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
விரைவில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைப் பெற பிராத்திக்கிறேன். இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம்!' என்று ஜாகீர் உசேனுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
கடைசியாக விக்ரம் 'தங்கலான்' படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து 'வீர தீர சூரன்' படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கி இருக்கிறார்.
இப்படம் வருகிற ஜனவரி மாதம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், விக்ரமின் 63}ஆவது படத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அதன்படி 'விக்ரம் 63' படத்தை 'மண்டேலா', 'மாவீரன்' படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
நயன்தாரா ஆவணப்படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்னர் தனுஷூக்கு எதிராக அறிக்கை வெளியிடப்பட்டதால் சிலர் நயன்தாரா விளம்பரத்துக்காக இதுபோல அறிக்கையை வெளியிட்டுள்ளார் எனப் பேசி வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் நயன்தாரா. 'தனுஷ் தனது அழைப்பை எடுக்கக் கூட தயாராக இல்லை என்பதால் இதைப் பொதுவில் முன்வைப்பதைத் தவிர வேறு வழி தனக்கு இல்லை' எனக் கூறியிருக்கிறார் நயன்.
'பகவந்த் கேசரி' பாலையா நடிப்பில் கடந்தாண்டு டோலிவுட்டில் வெளியான திரைப்படம். இத்திரைப்படத்தை ரீமேக் செய்து பாலையா கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் அவரின் மகளாக மமிதா பைஜூ நடிப்பதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது.
இது தொடர்பாக விசாரிக்கையில், 'அதெல்லாம் உண்மை இல்லை. தளபதி 69 ஆவது திரைப்படம் பகவந்த் கேசரி படத்தோட ரீமேக் கிடையாது. 'தளபதி 69' ஒரு ஆக்ஷன் திரைப்படம். மற்றபடி சோசியல் மீடியாவில் வருகிற தகவல்களெல்லாம் உண்மை கிடையாது.' என்றனர்.
நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்கும் அடுத்த திரைப்படத்தை, 'விலங்கு' வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு 'மாமன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக பூஜையுடன், படப்பிடிப்பு இனிதே துவங்கியது. கருடன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு, லார்க் ஸ்டூடியோ தயாரிப்பில், சூரி நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திரைக் கதிர்
செயல்தான் சிறந்த மொழி...

ஓடிடியில் வெளியான நயன்தாராவின் புதிய படம்!

திரைக் கதிர்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

