'என்னங்க.. வைர நெக்ஸல் ஒண்ணு நீங்க வாங்கித் தர்ற மாதிரி நேத்து கனவு கண்டேன்..'
'அதை கழுத்துல போடுற மாதிரி இன்னிக்கு கனவு கண்டுடு சரியாகிடும்..'
-நெ.இராமகிருஷ்ணன்,
சென்னை-74.
'என்னங்க.. பையன் பாக்கெட்டுல காசு வைக்கறீங்க..?'
'பசங்க கையில் பணம் கொடுத்தா கெட்டுப் போயிடுவாங்க.. அதான்..'
-வி.சாரதி டேச்சு,
சென்னை-5.
'உன் தங்கச்சி சிங்கப்பூருக்கு ஹனி மூன் போய்ட்டு வந்தாளே.. என்ன வாங்கிட்டு வந்தா..'
'ரெண்டு மாசம் போனா தன்னால தெரியுமுங்க..'
-வி.ரேவதி,
தஞ்சை.
'எதுக்குங்க வீட்டு வாசலில் அடியாள் வைச்சிருங்கீங்களே..'
'கடன் வசூலுக்கு வர்றவங்களை விரட்டி அடிக்கதான்...'
-கு.அருணாசலம்,
தென்காசி.
'எதுக்குய்யா.. குடிச்சிட்டு கூடவே ஒரு பொம்பளையும் கூட்டியாந்திருக்கே..'
'நான் பேசுற இங்கிலீஷை உனக்கு மொழிபெயர்க்கத்தான்டி...'
'வெள்ளம் அம்மாவை அடிச்சிட்டு போவுதுடி...'
'போகட்டும் உங்க அம்மாதானே..'
'ஐயோ போகிறது உங்க அம்மாடி...'
-ப.சோமசுந்தரம்,
கோவிலம்பாக்கம்.
'நேத்து ஆபிஸ் போனிங்க.. ஆனா இன்னிக்குதான் வீட்டுக்கு வர்றீங்களே..'
'நான் பாட்டுக்குத் தூங்கிட்டேன். என்னை யாரும் எழுப்பலை அதான்..'
'என்னோட கண்ணை நல்லா பாரு.. என்ன தெரியுது..'
'உங்க உண்மையான அன்பு தெரியுதுங்க..?'
'அது இல்லை. கண்ணுல தூசி விழுந்திருச்சி. அதான்..'
-ஏ.எஸ்.கோவிந்தராஜன்,
கோடம்பாக்கம்.
'வடக்கே தலைவைச்சு படுத்தா திருடன் வரப் போற மாதிரி கனவு வருதேன்னு திசை மாற்றிப் படுத்தேன்..'
'இப்போ என்னாச்சுங்க..?'
'நானே திருட போறாப்புல கனவு வருது...'
'என்னங்க.. பேயோட விலாசம் என்ன..'
'ஊர் கோடி, புளிய மரம், ....'
'பீரோ சாவி கேட்டு திருடன் மிரட்டினப்ப நீங்க எதுவும் சொல்லலியே ஏங்க..?'
'உன்னையே மிரட்டினவன்கிட்ட நான் என்ன சொல்ல முடியும்.. சொல்லு..'
-பர்வதவர்த்தினி,
பம்மல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


