திரைக்  கதிர்

பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிற படம் "தங்கலான்'. டீசர் வந்த பிறகு அதன் மேக்கிங் பற்றியும் விக்ரமின் தோற்றம், நடிப்பு பற்றியும் பல மடங்கு எதிர்பார்ப்பு எகிறி விட்டது.
திரைக்  கதிர்
Published on
Updated on
2 min read

பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிற படம் "தங்கலான்'. டீசர் வந்த பிறகு அதன் மேக்கிங் பற்றியும் விக்ரமின் தோற்றம், நடிப்பு பற்றியும் பல மடங்கு எதிர்பார்ப்பு எகிறி விட்டது. குறிப்பாக படத்தின் கதை, அதை எப்படிக் கையாண்டு இருப்பார்கள் என்ற வகையிலும் ஒருவித எதிர்பார்ப்பு இருப்பதால், "படம் எப்போது ரிலீஸ்' என இணையதளங்களில் ரசிகர்கள் ஆர்வம் பெருகி கேட்கத் தொடங்கி விட்டார்கள். முதலில் "தங்கலான்' பொங்கல் வெளியிடாகத்தான் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில தனிப்பட்ட சந்திப்புகளிலும் விக்ரமும், டைரக்டர் பா.இரஞ்சித்தும் அதையேதான் உறுதி செய்தார்கள். படத்திற்கான இசையமைப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்கெனவே நிதானமாகத் தேவையான நாள்களை எடுத்துக்கொண்டு முடித்துக் கொடுத்து
விட்டார். இப்போது ஏப்ரலில் ரிலீஸ் என்கிறார்கள். 

---------------------------------------------

2014-ஆம் ஆண்டு இயக்குநர் விஜய்யைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார் அமலாபால். பின்னர் இருவரும் 2017-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.  விவாகரத்திற்குப் பிறகு அமலா பால் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இதனிடையே  சமீபத்தில் அதாவது கடந்த வருடம்  நவம்பர் 6 - ஆம் தேதி ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களைப் பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அமலா பால்- ஜகத் தேசாய் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

---------------------------------------------

இந்த 2024, கார்த்தியின் ஆண்டாக இருக்கும் போலிருக்கிறது. இயக்குநர்கள் நலன் குமாரசாமி, பிரேம்குமார் ஆகியோரது படங்களின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த கார்த்தி, இப்போது ஒரே சமயத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தன்25-ஆவது படமான "ஜப்பான்' படத்திற்குப் பிறகு, நலன் குமாரசாமியின் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். சென்னையில் ஒரு ஷெட்யூல் நடந்து முடிந்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். 

"ஜப்பான்' படப்பிடிப்பிற்கு இடையே இதன் படப்பிடிப்பையும் தொடங்கினார் கார்த்தி. இதில் எம்.ஜி.ஆரின் ரசிகராக அவர் நடிக்கிறார் என்ற பேச்சு இருக்கிறது. படத்தின் தலைப்பு "வா வாத்தியாரே' என்றும் சொல்லி வருகிறார்கள். 

---------------------------------------------

இலங்கையில், புத்தாண்டை முன்னிட்டு இசையமைப்பாளர் இமானின் "கச்சேரி ஆரம்பம்' நிகழ்ச்சி பட்டையைக் கிளப்பியிருக்கிறது. "பலவிதமான சங்கடங்களில் இருந்தவரா இந்தப் போடு போடுகிறார்?' என்கிற அளவுக்கு நிகழ்ச்சியை செம எனர்ஜியாக நடத்திக் காட்டினாராம் இமான். பாடல்களும் ஒருங்கிணைப்பும் ஒருபுறமென்றால், மாஸாக வந்திறங்கிய இமானின் ஸ்டைலான தோற்றமும் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கிறது. "சார் நடிப்பின் பக்கம் திரும்பினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'என்கிறார்கள் இமானின் ரசிகர்கள்.

---------------------------------------------

இயக்குநர் அட்லி, மும்பையில் சொந்த ஆபீஸ் போடுகிறார். பட்ஜெட் எவ்வளவு தெரியுமா... மலைத்துப் போகாதீர்கள். ஜஸ்ட் 40 சி-தானாம். "ஜவான்' அசுர வெற்றியை அடுத்து, ஷாருக் கானின் செல்லப்பிள்ளையாக  உயர்ந்திருக்கும் அட்லி, அடுத்த படத்தையும் அவரை வைத்தே தொடங்கப்போகிறாராம். "ஷாருக் கான் - விஜய் காம்பினேஷன்' என அட்லி ஸ்கெட்ச் போட, தயாரிப்பாளர்கள் முட்டி மோதுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com