எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிரி... சிரி...

புலவரை வெளியே போகச் சொன்ன மன்னர்: காரணம் என்ன?

News image
Updated On :7 ஜூலை 2024, 12:33 pm

ங்கே பதுங்கியிருந்தாலும் அதைக்

கண்டுபிடிக்க புதிய "ஆப்' ஒன்று

வந்துள்ளதாம் மன்னா...?''

'ஆப்பு வைப்பதற்கென்றே ஒரு ஆப்பா...''



'மன்னர் யாருக்கு அஞ்சுவார்.. ராணிக்கா? எதிரிக்கா?''

'புலவரை விட்டு விட்டீர்களே..''



'அந்தச் சாமியார் முழித்தவுடன் ஜெபமாலையை உருட்டுகிறாரே..?''

'ஆம் அரசே.. மாலையில் உள்ள தங்க முத்துகள் சரியாக இருக்கிறதா என்று சோதிக்கிறார்...''



'அமைச்சரே.. உங்க காதில் மூதாட்டி வந்து ஏதோதோ சொல்லிட்டு போகிறாரே.. அவர் யார்..''

'மன்னா.. அது என்னோட மாமியார்தான்...''

--வி.ரேவதி, தஞ்சாவூர்.

'மாத்தி யோசிச்ச புலவரை அரண்மனையைவிட்டு வெளியே போகச் சொல்லிட்டாரே மன்னர். எதற்காம்?''

'இதுவரை மன்னரை புகழ்ந்த புலவர், மாற்றத்துக்காக மகாராணியை புகழ்ந்து பாடினாராம்.''

-எம்.சுப்பையா, கோவை.

'அமைச்சரே.. தூது சென்ற அரண்மனைப் புறா பாதியிலேயே திரும்பி வந்துவிட்டதே! ஏன்?''

'மன்னிக்க வேண்டும் மன்னா.. தூது ஓலையை புறாவின் காலில் கட்ட மறந்துவிட்டேன்...''

-கே.ராமநாதன், மதுரை.

'புலவரே.. பரிசை வாங்கி சேடிப் பெண்ணிடம் ஏன் கொடுத்தீர்..?''

'கடந்த முறை பரிசு கிடைக்காதபோது, கடன் வாங்கினேன் மன்னா..''

-அ.ரியாஸ், சேலம்.

'மன்னா.. வாள், கேடயத்தை எல்லாம் கழற்றி வைத்துவிடுங்கள்..''

'ஏன் அமைச்சரே..''

'எதிரி நம் நாட்டுக்கு விருந்தாளியாக வருகிறானாம்...''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

'பாடி முடித்த புலவர் சன்மானத்தைக் கேட்காமல் போகிறாரே அமைச்சரே..''

'தாங்கள் அணிந்திருந்த கவரிங் நகைகளைப் பார்த்ததும் கஜானா காலி என்பதை புரிந்துகொண்டுவிட்டார் மன்னா?''

-பர்வீன் யூனுஸ், சென்னை.

'அவர்தான் நம் மன்னர் உயிரைக் காப்பாற்றினார்...''

'அரண்மனை வைத்தியரா?''

'இல்லை.. பதுங்குக் குழி வெட்டுற ஆள்..''

-வி.சாரதி டேச்சு, சென்னை-5.

'அமைச்சரே... இந்த சமையல்காரர் ஏன் ஆடிக்கொண்டே சமைக்கிறார்..?''

'மன்னா.. அவருடைய பெயர் "ஆடியபாதம்' என்பதால்தான்...''

-அ.செந்தில்குமார், சூலூர்.

'அமைச்சரே.. இது என்ன புலி ஜோதிடம்...''

'மன்னரே.. எதிரே உள்ள புலி படத்துக்கு முன்பு சோழி உருட்டி ஜோதிடம் கூறுவார் அவர் அதனால்தான்...''

-மஞ்சுதேவன், பெங்களூரு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.