ஆறு தலை முறையாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பம்

ஆறு தலை முறையாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பம்
Updated on
1 min read

இந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பத்தை பார்ப்பது அரிதாகி விட்டது. எல்லாம் தனி குடித்தனங்கள். திருமணப் பேச்சு நடக்கும் போதே 'புது மணமக்கள் தனிக் குடித்தனம் போவார்களா' என்று கேட்டுத்தான் திருமணமே நடக்கின்றன.

அப்படியே கூட்டுக் குடும்பம் இந்தியாவில் இருந்தாலும் அதன் வாழ்நாள் சில ஆண்டுகள்தான். வெகு வெகு அபூர்வமாக சில கூட்டுக் குடும்பங்கள் ஒரு தலை முறை காலத்திற்குத் தாக்கு பிடிக்கும். இரண்டு மூன்று தலை

முறைக்கு நீளும் கட்டுக் குடும்பம் இன்றைய காலகட்டத்தில் அசாத்தியம். ஆனால், இந்தியாவில் ஆறுதலை முறையாக ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா ?

ராஜஸ்தானில் அஜ்மீர் நகருக்கு அருகே ராம்சார் என்ற கிராமத்தில் பத்து அல்ல முப்பது அல்ல... அறுபதுவும் அல்ல... 185 உறுப்பினர்கள் அடங்கிய கூட்டுக் குடும்பம் ஒன்று ஆறு தலைமுறைகளாக ஒன்றாக வாழ்ந்து சாதனை படைத்து வருகிறது.

'ஒன்றாக வாழுங்கள்' என்று முன்னோர்கள் அன்று சொல்லி விட்டுச் சென்றதால், அந்த வழி காட்டலுக்குக் கட்டுப்பட்டு ஆறுதலை முறைகளாக ஒரே வீட்டில் எந்த சண்டை சச்சரவு பூசல் இன்றி இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த மகா குடும்பத்த்தில் 65 ஆண்கள், 60 பெண்கள், 60 சிறார்கள் தற்சமயம் உள்ள்னர். இவர்களைப் பந்தம் பாசம் இணைத்து வைத்திருக்கிறது.

சொந்த நிலங்களில் வேளாண்மை செய்து உணவுக்குத் தேவையானவற்றை பயிரிட்டு அறுவடை செய்து கொள்கிறார்கள். காய்கறிகளையும் விளைவிக்கிறார்கள். 185 பேர்களுக்காக வீட்டில் 13 அடுப்புகள் எரிகின்றன. இங்குள்ள சமையல் அறை இதர அறைகளை விட பல மடங்கு பெரியது. 13 அடுப்புகள் வைக்க மிகப் பெரிய அறை அவசியம்தானே ...!

தினமும் அனைவருக்கும் ரொட்டி தயாரிக்க 60 கிலோ கோதுமை மாவு தேவைப்படுகிறது. 50 கிலோ காய்கறிகளையும் பயன்படுத்துகிறார்கள். இந்த மகா கூட்டுக் குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டு கோடி ரூபாய். வீட்டில் உள்ள ஆண்கள் வெளியே போக வர பயன்படுத்த 80 இரண்டு சக்கர வாகனங்களும் உண்டு. 'பகிடிமாலி' குடும்பம் என்று இந்தக் கூட்டுக் குடும்பம் அழைக்கப்படுகி றது.

உலகிற்கு ஆச்சரியக் குறியாக மாறி இருக்கும் இந்தக் கூட்டு குடும்பம் குறித்து எழுதாத ஊடகங்கள்... சேனல்கள் இல்லை. என்றா லும், 'பகிடிமா லி' குடும்பம் இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தி ல் இடம் பிடிக்கவில்லை. 'பகிடிமா லி' குடும்பம் அதற்கு முயற்சிக்கவில்லை என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com