ஆயுள் காக்கும் ஆயுர்வேதம் - சிறுநீர்ப் பை வலி குணமாக?
சிறுநீர்ப் பை வலி குணமாகும் ஆயுர்வேத மருந்து 'தான்யாம்லம்'


பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
பசியின்மையினால் என்னால் வேண்டிய அளவு உணவு எடுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் உடல் சோர்வும் ஆயாஸமும் ஏற்படுகிறது. இதய வலுவின்மையயை நெஞ்சில் ஏற்படும் சோர்வினால் உணர்கிறேன். மலம் சரியாக வெளியேறாமல் போவதால், முக்கி வெளியேற்ற முயற்சிக்கிறேன். அதுசமயம் சிறுநீர்ப் பை உள்ள பகுதியானது வலியை உணர்த்துகிறது. இவை குணாக ஆயுர்வேத மரு ந்து உள்ளதா?
-சாரங்கபாணி, கும்பகோணம்.
'தான்யாம்லம்' என்ற பெயரில் ஒரு மருந்தைத் தயாரித்து, நீங்கள் குறிப்பிடும் உபாதைகளைக் குணப்படுத்தப் பயன்படுத்தியதாக ஆயுர்வேத நூல்களில் காணப்படுகிறது.
'தான்யாம்லம்' என்பதற்கு வெப்புக்காடி, காஞ்சிகம் என்ற வேறு பெயர்களும் உண்டு. இதில், மருந்தை அரிசி கழுவிய தண்ணீர் கலந்து தொடர்ந்து சூடு செய்து புளிக்கச் செய்வார்கள். சுமார் நூறு, இருநூறு வருடங்களுக்கு முன் கிராமங்களில் இதை எப்படி தயாரித்துப் பயன்படுத்தி குணமடைந்தனர் என்பதையும் நீங்கள் தெரிந்துக் கொள்வது நலம்.
வாயகன்ற, ஓர் ஆள் அமரக் கூடிய அளவுள்ள ஒரு பெரிய மண்பாத்திரத்தை எடுத்து காற்று அதிகமில்லாத ஓர் அறையில் வாயகன்ற அடுப்பு செய்து, அதன் மீது வைப்பார்கள். பாத்திரத்தின் அடிப்பகுதி, பாத்திரத்தைச் சுற்றி உமியால் நிரப்புவார்கள். அகன்ற வாய்ப் பகுதியில் குறுகலான ஓர் நீளமான கட்டையை வைப்பார்கள்.
தேவையான மருந்துகள்: பச்சரிசி, அவல், கொள்ளு, நெற்பொரி, தினையரிசி, வரகு அரிசி, சுக்குப் பொடி, எலுமிச்சை (4 துண்டுகளாக வெட்டியது), ஓமம் (இதற்கு பதிலாக நவதானியங்களையும் தான்யாம்லம் தயார் செய்ய பயன்படுத்தலாம்).
மேற்கூறிய மருந்துகள் அனைத்தும் அரை கிலோ வீதம் தனித்தனியாக கிழிகட்டி பாத்திரத்தில் குறுக்கே வைக்கப்பட்டுள்ள மரக்கட்டையில் கட்டி தொங்க விடுவர். இம்முறைக்கு டோல இயந்திர முறை என்று பெயர். பின்பு, கிழிகள் அனைத்தும் நன்கு மூழ்கும்படி அரிசி கழுவிய தண்ணீரால் பாத்திரத்தில் நிரப்புவர். அடுப்பில் தீமூட்டி, தீ ஒரே சீராக இருக்கும்படி ஏழு நாள்கள் பார்த்துகொள்வர். அடுப்பு எரியும்போது, உமி தீர நேரிட்டால் மீண்டும் உமியை நிரப்ப வேண்டும். இவ்வாறு தயார் செய்த வெப்புக்காடியை எட்டாவது ôள் தேவையான அளவு எடுத்து அதற்கு சமமாக அரிசி கழுவிய தண்ணீர் கலந்து உபயோகிக்கலாம்.
குணம்: தான்யாம்லத்துக்கு, தொடுவதற்கு குளிர்ச்சித் தன்மை எனும் குணமுடையதால் பித்த சீற்றத்தினால் உண்டான எரிச்சலுடன் கூடிய நோய்களில் வெளியே தோலின் மீது தாரையாக ஊற்றுவதற்குப் பயன்படுகிறது. மேலும், உள்ளுக்குள் சூடு எனும் குணமுடையதால் சளியினால் ஏற்படும் நோய்களில் உள்ளுக்குச் சாப்பிட பயன்படுத்தப்படுகிறது.
நல்லதொரு மலமிளக்கி. உடல் உள்புறங்களில் ஊடுறுவும் தன்மையுடையது. உடல் சோர்வு, ஆயாஸம் போக்கும். பசியைத் தூண்டிவிடும். சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர் பையில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும். இதயத்தை வலுவாக்கும். செரிப்பதில் எளிதானது. வாதம் மற்றும் கபம் சார்ந்த உபாதைகளைக் குணப்படுத்தும்.
சில கம்பெனிக்காரர்கள் இதைத் தயாரித்து விற்பனையும் செய்து வருகின்றனர்.
தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...