திரைக் கதிர்

சினிமா உலகின் புதிய பரிமாணங்கள்
திரைக் கதிர்


சமந்தா மீண்டும் தமிழுக்கு வருகிறார்... என்னதான் பாலிவுட், தெலுங்கு எனக் கொடிகட்டிப் பறந்தாலும், தமிழில் அட்டகாசமான ஒரு படத்தைக் கொடுத்து அசத்த வேண்டும் என நினைக்கிறாராம் சமந்தா. 'ஹீரோயின் சார்ந்த கதையாக இல்லாமல், பக்கா மாஸ் கதையாக இருக்க வேண்டும்' எனச் சொல்லியிருக்கிறாராம். தமிழின் அத்தனை முன்னணி ஹீரோக்களும் சமந்தாவுடன் ஜோடி போடக் காத்திருக்க, அவர் யார் பெயரை 'டிக்' செய்யப் போகிறார் என்பதுதான் சஸ்பென்ஸ். விவகாரத்து, நோய் பிடி... என சச்சரவுகளுக்குப் பின் தமிழ்ப் பக்கம் வருகிறார் சமந்தா.

-----------------------------------------------------------------

நடிகர் அஜித் இரண்டே நாள்களில் சிகிச்சை முடிந்து கிளம்பினாலும், வேறு ஒரு மருத்துவமனையில் முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட்டதாம். பல நாள்களுக்கு முன்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வாகன விபத்துதான், அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததாம். அப்போதைக்கு அதைச் சட்டை செய்யாமல், சாதாரண சிகிச்சையுடன் ஷூட்டிங்குக்குப் போனாராம். அதுதான் பெரிய சிக்கலாக மாறி, முக்கிய பாகத்தைப் பாதிக்க வைத்ததாம். 'பயமில்லை என்றாலும், சில காலம் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அவசியம்' எனச் சொல்லியிருக்கிறார்களாம் மருத்துவர்கள். இந்த விஷயம் வெளியே கசியக் கூடாது என்பதற்காகத்தான், அடுத்த பட அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட்டாராம்.

-----------------------------------------------------------------

இளையராஜாவின் பயோபிக்கில் இளையராஜாவாக நடிக்கிறார் தனுஷ் என்பதும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார் என்பதையும் அதிகாரப் பூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. படத்திற்கு 'இளையராஜா' என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவா இல்லை வேறு ஒருவரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில், படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் எழுதுகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதை நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீங்கீதம் சீனிவாசராவின் படைப்புகளையும், பங்களிப்பையும் கொண்டாடும் வகையில், 'அபூர்வ சிங்கீதம்' என்கிற பெயரிலான விழாவை சென்னையில் கமல்ஹாசன் ஒருங்கிணைத்தார். இதில்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

-----------------------------------------------------------------

மீண்டும் பாலிவுட் செல்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது சிவகார்த்திகேயனின் 23-ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து இயக்குகிறார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அந்தப் படம் அடுத்தாண்டு ரமலான் ஸ்பெஷலாகத் திரைக்கு வரும் என்று முருகதாஸை அறிவித்துவிட்டார். யக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் 'கஜினி' படத்தை ரீமேக் செய்ததன் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. தொடர்ந்து அக்ஷய் குமாரை வைத்து 'துப்பாக்கி' படத்தை 'ஹாலிடே' என்ற பெயரில் ரீமேக் செய்தார். கடைசியாக அவர் பாலிவுட்டில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து 'அகிரா' என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் அருள்நிதி நடிப்பில் வெளியான 'மெளன குரு' படத்தின் ரீமேக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com