

2023-ஆம் ஆண்டிற்கான 'ஐபா' விருது விழா அபுதாபியில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'ஜவான்' திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை இயக்குநர் மணிரத்னமும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானும் வழங்கினர்.
இயக்குநர் மணிரத்னம் மேடையில் ஏறியதும் அவரின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார், ஷாருக். இதுமட்டுமல்ல இந்த விருது விழா முழுவதையும் விக்கி கௌஷல், கரண் ஜோகர் ஆகியோருடன் அத்தனை பொழுதுபோக்கு அம்சத்துடன் தொகுத்து வழங்கியிருக்கிறார் ஷாருக்கான்.
'மெய்யழகன்' படத்தை பாராட்டி நடிகர் நாகார்ஜூனா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், 'என் அன்புச் சகோதரர் கார்த்தி நடித்த திரைப்படத்தைப் பார்த்தேன். ஆரம்பம் முதல் இறுதி வரை என் முகத்தில் ஒரு இனிய புன்னகை தவழ்ந்தது.
அதே மகிழ்ச்சியான உணர்வுடன் உறங்கச் சென்றேன். இப்படம் என் குழந்தைப் பருவத்தின் இனிய நினைவுகளை மீட்டெடுத்ததோடு, நாங்கள் இருவரும் இணைந்து நடித்த 'தோழா' திரைப்படத்தின் அனுபவங்களையும் நினைவுபடுத்தியது' என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா பயணத்தின் கடைசி திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஹெச். வினோத் இயக்குகிறார். 5-ஆவது முறையாக விஜய் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். கன்னட திரையுலகின் 'கே.வின். என் புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் வேறெந்த நடிகர்கள் நடிக்கவிருக்கிறார்கள் என்ற தகவலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.
இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ரஜினி, விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் இசையமைப்பாளராக முதல் சாய்ஸில் இப்போது இருப்பது அனிருத்தான். அவர் டோலிவுட்டில் இசையமைத்த ஜூனியர் என்.டி. ஆரின் 'தேவரா' திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் இசையில் அடுத்து திரைக்கு வரும் படமாக ரஜினியின் 'வேட்டையன்' இருக்கிறது. இதற்கிடையே ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
திரைக் கதிர்

அவளை அதிகம் மிஸ் செய்தேன்.. விஜய் தேவரகொண்டா உருக்கம்!
திரைக் கதிர்

திரைக் கதிர்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

