'வேட்டையன்' படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினி, துஷாரா, ரித்திகா சிங் என நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் டப்பிங் பேசியுள்ளனர். ராணா உள்பட சிலரின் டப்பிங், ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஆக, வரும் வாரத்திற்குள் மொத்த டப்பிங் வேலைகளும் முடிந்துவிடும். ரீஷூட் எடுக்க வேண்டியது எதுவுமில்லை. எல்லா சீன்களும் பக்காவாக ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. இம்மாதத்திற்குள் படம் ரெடியாவிடும். எனவே படம் திட்டமிட்டபடி அக்டோபர் 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
வெற்றி மாறனின் 'விடுதலை 2'வின் படப்பிடிப்பும் இப்போது நிறைவு கட்டத்தை நோக்கி வருகிறது. இந்த இரண்டாம் பாகம், வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வருமென அறிவித்து விட்டதால், பரபரப்பாகியுள்ளது படக்குழு. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர், தென்காசி பகுதிகளில் சில வாரங்கள் நடைபெற்றது. அங்கே விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் காம்பினேஷனும், பீட்டர் ஹெய்னின் சண்டை இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டன. இப்போது மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி... 27 வயதில் விஜய்க்கு ஜோடியான மீனாட்சி செளத்ரியின் பூர்வீகம் ஹரியானாமாநிலம். நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனையான இவர், இளங்கலையில் டென்டல் சர்ஜரி படித்து முடித்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார். தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
'களவாணி-2' உள்ளிட்ட படங்களின் கவனம் பெற்றவர் துரை சுதாகர். தற்போது சின்னத்திரையிலும் இவர் தடம் பதித்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், இவர் கதாநாயகனாக நடித்த 'தப்பாட்டம்' படத்தின் புகைப்படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார் துரை சுதாகர். தற்பொழுது சன் தொலைக்காட்சியில் 'மூன்று முடிச்சு' என்ற மெகா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.
கன்னிமாடம்' மூலம் இயக்குநராகக் கவனம் பெற்ற போஸ் வெங்கட் இயக்கி வரும் படம் 'சார்'. விமல் நடிப்பில் கல்வியை மையப்படுத்தி அருமையான கமர்ஷியல் திரைப்படமாக, அனைவரும் ரசிக்கும் வகையில், அழுத்தமான படைப்பாக, இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்.
அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில், இப்படத்தை இம்மாத இறுதிக்குள் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. பட வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...


