ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரைக் கதிர்

சூர்யாவின் 'கங்குவா' வருகிற நவம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

News image
கங்கனா - ரகுல் ப்ரீத் சிங்
Updated On :28 செப்டம்பர் 2024, 6:30 pm

DIN

2025-ஆம் ஆண்டு ஐரோப்பிய 4 சாம்பியன் ஷிப்பில் பங்கேற்க அஜித் திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் அஜித்தே இது குறித்த அப்டேட்டை வெளியிடுவார் என்றும் இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது. அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருப்பதை இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

சூர்யாவின் 'கங்குவா' வருகிற நவம்பர் 14-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில், 3டி தொழில் நுட்பத்தில் வெளியாவதால் போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடைபெறும் என்ற தகவல் பரவி வருகிறது. 'சிறுத்தை' சிவா வின் இயக்கத்தில் சூர்யா நடித்து 'கங்குவா' சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார்.

படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கங்கனாவிற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த இழப்பை சரி செய்ய சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சொந்த வீட்டை கங்கனா ரனாவத் விற்பனை செய்தார் எனவும் கங்கனா தரப்பில் சொல்லப்பட்டது. படத்திற்காக தனது வீட்டை விற்பனை செய்தது குறித்து கங்கனா ரனாவத்தும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், எமர்ஜென்சி படம் வெளியானால் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதி படத்தை வெளியிட மத்திய அரசு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தவறவிட்ட படங்கள் குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசிய அவர், 'நான் திரைத்துறைக்கு அறிமுகமாவதற்கு முன் பிரபாஸ் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தேன். நான்கு நாள்கள் அப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தேன். ஆனால் அப்படத்தில் இருந்து திடீரென்று என்னை நீக்கிவிட்டார்கள். எனக்கு சரியான தகவல் கூட அவர்கள் கொடுக்கவில்லை' என்று கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய ராகுல் ப்ரீத் சிங், சுஷாந்த் சிங் ராஜ்புத் உடன் இணைந்து எம். எஸ் தோனியின் பயோபிக் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாகவும் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.