காலத்தால் அழியாத காவியமான ராமாயணம், பாகிஸ்தானின் கராச்சியில் ஜூலை 11 முதல் 13 வரை நாடகம் அரங்கேறியது.
பாகிஸ்தானின் தேசிய நிகழ்த்து கலை நிலையத்தில் படித்த கலைஞர்கள் ராணா காஸ்மி, சனா தோஹா ஃப்ரெய்டி, யோகேஷ்வர் கரேரா உள்ளிட்டோர் இணைந்து உருவாக்கிய 'மெளஜ்' என்ற நாடகக் குழுவினர் வடிவமைத்த 'ராமாயணம்', கடந்த ஆண்டில் சோதனை அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தற்போது அரங்கேற்றம் செய்யப்பட்ட மேடையில் 'செட்' எதுவும் போடப்படவில்லை. கதைக் களத்தில் வரும் அரண்மனை, வனம், பூங்கா போன்றவை வரையப்பட்ட திரைச் சீலைகள் எதுவும் இல்லை. எல்.இ.டி. திரையில் காட்டப்பட்ட மலைகள், வனப் பகுதிகள், கடல், போர்க் காட்சிகள் நாடகத்தை ஒரு ஹை-டெக் நாடகமாக உயர்த்தியது.
இதுகுறித்து நாடகத் இயக்குநர் யோகேஷ்வர் கரேரா கூறியது:
'முதலில் ராமாயணத்தின் ஆறு முக்கிய காட்சிகளை வடிவமைத்து ஆறு தனித்தனி மேடைகளில் அரங்கேற்ற முடிவு செய்திருந்தோம். நடைமுறைச் சிக்கல்களால், 10 காட்சிகள் கொண்ட நாடகமாக மாற்றினோம். பார்வையாளர்கள் புரிந்துகொள்ளும் வகையில், வசனங்களை மென்மையாக்கினோம்.
நாடகம் 80 நிமிடங்கள் வரை நடக்கும். நாடுகள் வேறுபட்டாலும், நடிப்பு, உணர்ச்சி, புராணத்தின் வீச்சு நாட்டு எல்லைகளை கடக்கின்றன. பிற நாட்டு மக்களை இணைக்கும் கலாசார பாலமாகவும் அமையும்' என்கிறார் யோகேஷ்வர் கரேரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.