அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப்பை கவர்ந்துள்ள துபையில், அவர் தனது சொத்துகளை விரிவுபடுத்துகிறார். அழகான உயரமான அடுக்குமாடியை 80 தளத்துடன் கட்டுகிறார்.
நகரின் மையப் பகுதியில் 'டிரம்ப் ஹோட்டல் அன்ட் ரெசிடென்சஸ்' என்ற இந்தக் கட்டடம் அமைகிறது. சுமார் 1,150 அடி உயரத்தில், உலகில் மிகப் பெரிய நீச்சல் குளமும் அமைகிறது. இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விலைகள் சுமார் எட்டரை கோடி ரூபாய் மட்டுமே. நான்கு படுக்கையறைகள் கொண்ட பென்ட்ஹவுஸ்களும் விற்பனைக்கு உண்டு.
இங்கு ஃபிளாட் வாங்கினால் 10 ஆண்டுகளுக்கு இலவசமாக துபை விசா கிடைக்கும். இந்த ஹோட்டலின் பெரும்பாலான அறைகளிலிருந்து உலகின் மிக உயரமான வானளாவிய கட்டட மும் 2,700 அடி உயர புர்ஜ் கலீஃபாவையும், பாரசீக வளைகுடா கடலையும் ரசிக்கலாம்.
டிரம்ப் தனது துபை கோபுரத்தை 2031-இல் திறக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தக் கோபுரத்திலிருந்து துபை மால், துபை ஓபரா, துபை சர்வதேச நிதி மையம், பாம் ஜுமேரா போன்ற பிரபல இடங்களுக்கு 20 நிமிட கார் பயணத்தில் சென்று வரலாம். டிரம்ப் துபை ஹோட்டல், வளைகுடா நாடுகளில் டிரம்ப் செய்யும் முதல் முதலீடு இதுவேயாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.