பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
எனக்கு வயது முப்பத்து இரண்டு. அலுவலக வேலை காரணமாக, அடிக்கடி தில்லி, மும்பை, கொல்கத்தா என்று விமானம் மூலம் பயணம் செய்துவிட்டு பெங்களூரு திரும்பி வருவேன். எப்போதும் பயண இறுதியில் உடலில் கணகணவென்று காய்ச்சலும், மூன்று அல்லது நான்கு தடவை மலம் இளகிப் போவதுமாக இருக்கிறது. இதனால் பலஹீனம், மந்தம், ஆயாஸமாக உணர்கிறேன். இதை சரி செய்யக் கூடிய உணவு, மருந்துகள் உள்ளதா?
-சாய்கிஷோர், பெங்களூரு
பல மாநிலங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலை உங்களுக்கு உருவாகியிருப்பதால், உணவில் நேரும் பல மாற்றங்களால், அவற்றை செரிக்கச் செய்வதற்காக, ஊற்றெடுக்கும் பித்தநீரின் அதிகமான வரவால் காய்ச்சலும் பேதியும் ஏற்படுகிறது. பித்தநீரில் பொதிந்துள்ள ஊடுருவும் தன்மையும், சூடும் ஒருசேர இணைந்து இந்த உபாதைகளைத் தோற்றுவிக்கின்றன. இவற்றைச் சமநிலைப்படுத்த கசப்புச் சுவையுடன் மலத்தைக் கட்டக் கூடிய மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஊருக்குத் திரும்பியவுடன் சுமார் பத்து- பனிரெண்டு மணி நேரம் பட்டினியிருந்து அதன்பிறகு கீழ்காணும் வகையில் கஞ்சி தயாரித்துக் குடித்தால் அது உங்களுக்கு மிகவும் நல்லது.
ஒரு பங்கு பச்சரிசி, பதினான்கு பங்கு தண்ணீர் கலந்து வேகவைக்கவும். அரிசி நன்கு வெந்ததும் வடிகட்டி, அதன் தெளிவை மட்டும் பருகவும். இது எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. 'ஜடராக்னி' எனும் பசித்தீயை போஷிக்கும். வாயு, சிறுநீர், குடல் அழுக்கு இவற்றை வெளியேற்றும் திரவமாகவும், சூடாகவும் இருப்பதால் சுவைக்க இதமாகும்.
திரவத்தால் தண்ணீர் தாகத்தைத் தீர்க்கும் உணவுப் பொருளானதால் உயிருக்கு இதமாகும். எளிதில் செரிக்கும் லேசான தன்மையால் உடல் கனத்தை இல்லாததாக்கும். காய்ச்சலையும், பேதியையும் கட்டுப்படுத்தும் சுமார் மூன்று நாட்கள் காலை உணவாக இதை எடுத்துகொள்ளலாம். புழுங்கல் அரிசி நொய் சேர்த்தும் இந்தக் கஞ்சி செய்வது மரபு. இதுபோன்ற நிலையைச் சமாளிக்க, கிராமங்களில் எளிதான மூலிகைகளைக் கொண்டு கஷாயம் தயாரித்துச் சாப்பிடுவது முன்பு வழக்கத்தில் இருந்தும் உதாரணத்துக்குச் சில:
வில்வக் காயின் உட்பகுதி (இளம்வில்வ மஜ்ஜை) மற்றும் மாங்கொட்டைப் பருப்பு. இதனைக் கஷாயம் வைத்து ஆறிய பின் சர்க்கரை, தேன் சேர்த்துக் கொடுக்க, காய்ச்சல், வாந்தி மற்றும் பேதி நிவர்த்தியாகும். இதைக் கஷாயமாகக் காய்ச்சி மோர் சேர்த்துக் கொடுப்பதுமுண்டு.
கோரைக்கிழங்கு மட்டும் கஷாயம் வைத்து சூடு ஆறியவுடன் தேன் சேர்த்துச் சாப்பிட, காய்ச்சல், பேதி குணமாகிவிடும்.
கொத்தமல்லி விதை (தனியா), சுக்கு, அதிவிடயம் சேர்த்து கஷாயமாக்கி அருந்த ஜூரம், நீர்வேட்கை, பேதி, பசியின்மை, வயிற்றுவலி முதலிய உபாதைகள் குணமாகும். வயிற்றில் ஏற்படும் மப்பு நிலையால், காய்ச்சல் ஏற்படும். அதுவும் குணமாகும்.
புளியாரை இலையும், மோரும் பொரிமாவும் சம அளவில் சேர்த்துக் கஞ்சி வைத்துக் குடித்தால் பேதி நின்றுவிடும். நாட்பட்ட பேதி, கிராணி எனும் உணவு சரிவர செரிமானமாகாமல் வெளியேறும் உபாதைகளுக்குச் சிறந்தது. பசியைத் தூண்டி குடல் வாயுவை அடக்கும். இது 'அமிபிக் கொலைட்டிஸ்' எனும் குடல் சார்ந்த உபாதைக்கு கண்கண்ட மருந்து. இந்த மோர்க் கஞ்சியுடன் கருவேப்பிலை, வெந்தயம் மைய அரைத்துச் சேர்த்துக் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.
சுக்கு, சீரகம், ஓமம் ஆகியவற்றைச் சம அளவாக எடுத்துப் பொடித்து, துணியால் சலித்து வைக்கவும். மூன்று சிட்டிகை வாயினுள் போட்டு மென்று சுவைக்கவும். மேல் வயிறு, குடல் சார்ந்த நுண்ணிய கிருமிகளை அழித்து, காய்ச்சல் பேதியை நீக்கித் தரும் வீட்டு கைவைத்திய முறைகளில் சிறந்தது.
முஸ்தாரிஷ்டம், சுக்கம்திப்பில்யாதி குளிகை, வில்வாதிகுளிகை மற்றும் வில்வாதிலேகியம், குடஜாரிஷ்டம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் இங்கு பயனுள்ளவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நிம்மதியாக உறங்க...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மூலநோய் குணமாக...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மலச்சிக்கல், பசியின்மை குணமாக...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

