திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சோழர் கால கல்வெட்டு

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்துக்கு அருகேயுள்ள மேவலூர்குப்பத்தில் வள்ளீசுவரர் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்பலகை நிலத்தில் புதைந்து காணப்படுகிறது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 8:13 pm IST

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலத்துக்கு அருகேயுள்ள மேவலூர்குப்பத்தில் வள்ளீசுவரர் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்பலகை நிலத்தில் புதைந்து காணப்படுகிறது. சோழ மன்னன் அதிராஜேந்திரன் (1067-76) காலத்தைய அந்தக் கல்வெட்டில் காணப்படும் செய்திகள்:

வீரராசேந்திர சோழனின் புதல்வரான இவர், சோழர் வரலாற்றில் மிகக் குறைந்த காலமே ஆட்சி செய்தவர். இவருடைய கல்வெட்டுகள் தொண்டை நாடு, நடுநாடு, தஞ்சாவூர், ஈழநாட்டுப்பகுதிகளில் காணப்படுகின்றன.

தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் செங்காட்டுக் கோட்டத்தில் உள்ள பெருங்களூர் பாக்கத்து ஊர் சபையினர் வழிபாட்டுக்கும், இறைவனுக்கு அமுது படைப்பதற்குமான நிலத்தை அளித்துள்ளனர். நிலத்தின் நான்கு எல்லைகளும் கூறப்பட்டுள்ளன. மேவலூர்குப்பம் என்று அழைக்கப்படும் ஊர் வள்ளியூர் திருவள்ளீசுவரமுடையார் மகாதேவர் கோயில் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவ்வூர் புலியூர்க் கோட்டத்து மாங்காட்டு நாட்டைச் சேர்ந்த நாட்டுப் பிரிவையும் குறிப்பிடுகிறது.

கற்பலகையில் இரு பக்கங்களும் 24 வரிகளும், இறுதிப் பகுதியில் நான்கு வரிகளும் அழிக்கப்பட்ட நிலையில் காணப்

படுகின்றன. முன்பகுதியில் காணப்படும் கல்வெட்டு வாசகம் போன்றே உள்ளது. கல்வெட்டை பொறிப்பதற்கு முன் இந்தப் பகுதியில் தொடங்கி, பின்னர் கற்பலகையின் மற்றொரு பகுதியில் கல்வெட்டை பொறித்திருப்பார்கள் எனக் கருதத் தோன்றுகிறது.

-கி. ஸ்ரீதரன், தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.