'மீட்டிங்ல தலைவர் ஏன் தரையில நின்னு மேடையைப் பார்த்துப் பேசறார்?'
'தரையைவிட மேடையிலதான் ஆளுங்க அதிகம் இருக்காங்களாம்!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'மன்னர் திடீரெனப் பதுங்குக் குழியை மாற்றி விட்டாரே... குழி இருக்குமிடம் எதிரிக்குத் தெரிந்து விட்டதா?'
'இல்லை... புலவருக்குத் தெரிந்து விட்டதாம்!'
- முபீன், சென்னை.
'என்ன ராப்பிச்சை... இப்பல்லாம் மதியமும் வர்றே?'
'ஓவர்டைம் பாக்கறேன், தாயி!'
'இவரை மாதிரி ஒரு சோம்பேறியைப் பார்க்க முடியாதா, ஏன்?'
'டெய்லி ஷீட் காலண்டரில் தேதி கிழிக்க 'ரோபோ' வச்சிருக்கிறாரே!'
-முகமது ஆதில், சென்னை.
'யாருக்கு மூன்று மாச நோட்டீஸ் ?'
'விருந்துக்கு வந்துட்டு வீட்டை விட்டுக் கிளம்ப மறுக்கும் உங்களுக்குத்தான்!'
'கடுகு பத்து கிலோன்னு மளிகை லிஸ்ட்ல போடறீயே..?'
'எனக்கு கிச்சன் அனுபவம் குறைவு அத்தே!'
'மேனேஜர் என்ன சொல்றார்... சீட்ல தூங்கக் கூடாதாமா?'
'குறட்டை விடாமல் தூங்கச் சொல்றார்.'
'மணப்பந்தலில் உன்னைக் காணோமே... எங்கே போனே?'
'மணப்பந்தியில் இருந்தேனே!'
'சிங்க கூண்டில் பெருச்சாளிங்க நிறைய இருக்கு..!'
'அப்ப சிங்கம் பெயரை அழிச்சிட்டு பெருச்சாளி கூண்டுன்னு மாற்றி எழுதிடுங்க!'
- பர்வதவர்த்தினி பம்மல்
'அமைதியா எப்படிக் குடும்பத்தை ஓட்டணும்னு என் மாமனார் கிட்டேதான் கத்துக்கிட்டேன்!'
'என்ன செய்வார் உங்க மாமனார் ?'
'வீட்டுல யார் எது பேசினாலும், காதுலயே விழாத மாதிரி இருந்துடுவாரு!'
'துப்பாக்கி முனையில உங்க கவுன்ட்டர்ல இருந்த பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்கான்... நீங்க கவலைப்படாமல் இருக்கீங்களே?'
'அவன் வர்றதுக்கு முன்னாடி டேலி பண்ணிப் பார்த்தப்ப ஒரு லட்சம் குறைஞ்சிது சார்...!'
'நீங்க ஏன் உங்க மனைவி பேர்ல ஷேர்ஸ் வாங்கறீங்க?'
'நல்லது கெட்டதுல அவளுக்கும் ஷேர் இருக்கட்டுமேன்னுதான்!'
'பாங்க்ல கொள்ளையடிக்கிறதுக்கு முந்தி நீ என்ன பண்ணிக்கிட்டிருந்தே?'
'சின்ன சின்ன 'பங்க்'ல திருடிக்கிட்டிருந்தேன், சாமி!'
'அந்தக் காதல் ஜோடி பீச்சுல கண்ணை மூடிக்கிட்டு ஒருத்தர் மேல ஒருத்தர் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்காங்களே, ஏன்?'
'கண் மூடித்தனமா காதலிக்கிறாங்களாம்!'
'உங்களைப் புகழ்ந்து பாட அகராதியில் வார்த்தைகளே இல்லை, மன்னா...!'
'அதே போல, உங்களுக்கு பரிசில் தர கஜானாவிலும் எதுவுமில்லை, புலவரே!'
'நம்முடைய பலம் - பலவீனம், எதிரியின் பலம் - பலவீனம் என்ன அமைச்சரே?'
'நம்முடைய பலவீனம், எதிரியின் பலம்; எதிரியின் பலம், நமக்கு பலவீனம்!'
'அந்தப் பாடகர் ஏன் கண்ணை மூடிக்கிட்டுப் பாடுறார்?'
'ஆடியன்ஸோட ரீயாக்ஷனைப் பார்த்துட்டா, அதுக்குப் பிறகு அவரால பாட முடியாதே!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!
குளித்தலையை தக்கவைக்குமா திமுக?
சிரி... சிரி...

ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு பலவீனம், அதிமுகவிற்கு பலம்: ஆர்.பி.உதயகுமார்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

