கூட்டு முயற்சியாலும், சமூகப் பங்களிப்பு மூலமாகவும் இந்திய கிராமங்களை மாற்றியமைக்க முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது, ஆடாச்சிவாடி' என்ற ஒரு சிறிய கிராமம். மகாராஷ்டிராவில், புனே மாவட்டத்தின் புரந்தர் தாலுக்காவில் அமைந்துள்ள இது தூய்மையான, ஸ்மார்ட் கிராமமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுக்காகப் போராடும் பல கிராமங்களைப் போலல்லாமல், ஆடாச்சிவாடி அதன் திட்டமிடல் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காகத் தனித்து நிற்கிறது.
179 குடும்பங்களைச் சேர்ந்த, ஏறத்தாழ 1500 பேர் வசிக்கும் இந்தக் குக்கிராமத்தில், எந்தப் பிரச்னையையும் கூட்டாக விவாதிக்கப்பட்டு முடிவு ஏக மனதாக எடுக்கப்படுகின்றன. பொறுப்புகள் பகிரப்படுகின்றன. ஆனால், அதுபோல வெற்றிகளும் அனைவருக்கும் பொதுவானதாகிறது.
ஒவ்வொரு வார இறுதியிலும் கிராமத்தை தூய்மையாக வைக்க கிராமம் மூலம் தூய்மைப்படுத்துகிறார்கள். குப்பைகள் மக்குபவை, மக்காதவை என்று பிரிக்கப்படுகிறது. பள்ளியில் வகுப்புகள் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகின்றன. கிராமத்தில் 46 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. ஸ்மார்ட் நீர் சுத்திகரிப்பு, விநியோக அமைப்பு, வீடுகள், பொது இடங்களை சூரிய சக்திக்கு மாற்றுவது வரை, நவீனப் பாதையில் ஆடாச்சிவாடி பயணிக்கிறது.
இன்னும் சில மாதங்களில் ஆடாச்சிவாடி 100 சதவீதம் சூரிய சக்தி பெறத் தயாராகி வருகிறது. கிராம உடற்பயிற்சிக் கூடம், சுடுகாட்டுக்கான விளக்குகள், ஊராட்சி அலுவலகம் போன்ற பொது இடங்கள் கூட சூரிய ஆற்றலால் இயங்குகின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் போதுமான அளவு சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.
கிராம மக்கள் ஊரின் மிகப் பழைய கிணற்று நீரை, நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் திருப்பிவிட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்திடமும் உள்ள ஒரு ஸ்மார்ட் கார்டை' இயந்திரத்தில் தேய்த்து, யார் வேண்டுமானாலும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை அட்டையைத் தேய்க்கும்போதும் ஒரு ரூபாய் கழிக்கப்பட்டு, 5 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதன் மூலம், தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. பணம் கழிக்கப்படுவதால், அது மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட மக்கள் தங்கள் வாளிகளில் நீரை மிகவும் சிக்கனமாகவே பிடித்துச் செல்கின்றனர்.
பின்னர், இவ்வாறு வசூலாகும் பணத்தை கிராம ஊராட்சி நிர்வாகம், அந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்துகிறது.
இவ்வாறு சேமிக்கப்படும் நீரின் அளவு மிக அதிகமாக இருப்பதால், சில சமயங்களில் அண்டை கிராமங்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும்போது, ஆடாச்சிவாடி கிராமம் மற்ற கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் வரை தண்ணீர் வழங்கி உதவியிருக்கிறது.
ஆடாச்சிவாடி' யின் முக்கிய வருமான ஆதாரம் அத்திப்பழ சாகுபடி ஆகும். இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் அத்திப்பழங்களைப் பயிரிட்டு, மாதத்துக்கு கிட்டத்தட்ட 3040 டன்களை ஏற்றுமதி செய்கிறது. ஆடாச்சிவாடி' அத்திப்பழத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
சில கிராமவாசிகள் வெங்காயம், சோளம், கத்தரிக்காய், அவரை, பூண்டு பயிரிட்டு, கோழிகளையும் வளர்க்கின்றனர். கிராம மக்களுக்குத் தேவையானவற்றில் 85 சதவீதத்தை அவர்களே உற்பத்தி செய்துவிடுகிறார்கள். கிராமத்தில் ஆசிரியர்களாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்கள் இரவு நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றனர்.
வீட்டுப் பயன்பாட்டுக்கு எரிபொருளை வழங்கும் ஓர் உயிரிவாயு ஆலையை கிராம நிர்வாகம் அமைத்து வருகிறது. கிராம மக்கள் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் நிறுவி வருகின்றனர். அங்கு கிராமத்திலிருந்து வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு விவசாயப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றப்படும்.
கடந்த பத்தாண்டுகளாக இந்தக் கிராமத்தில் எந்தக் குற்றமும் நடக்கவில்லை. கிராமத்தில் இலவச பொது வைஃபை வசதி உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் ஒரே ஒரு வீட்டை மட்டுமே கட்டிக்கொள்ள முடியும். கிராமத்தில் மீதமுள்ள நிலம் பல்வேறு சமூக வசதிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிராமத்தில் முதியோருக்கான தாத்தா பாட்டி பூங்கா' செயல்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோய்நாடி நோய்முதல் நாடி...
நொய்யலை மீட்டெடுக்கும் சிறுதுளி!

முத்தான முத்தல்லவோ...

என்னால் முடிகிறது... உங்களாலும் முடியும்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

