ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புஎச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
/

கரை இல்லாக் கல்வி...

நான் 11 சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 12:37 pm

நான் 11 சாதனைகளை நிகழ்த்தியுள்ளேன். இதில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்', ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்', இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' ஆகியவற்றின் அங்கீகாரங்களும் அடங்கும். இவை அனைத்தும் கல்வித்துறையில் நான் புரிந்த சாதனைகளுக்காக வழங்கப்பட்டவை' என்கிறார், ராஜஸ்தானைச் சேர்ந்த 55 வயதான முன்னாள் ராணுவ வீரர் தசரத் சிங்.

ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு அண்மையில் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் பட்ட

மளிப்பு விழாவில், வேத ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தை சிறப்புத் தகுதியுடன் நிறைவு செய்ததற்காக வழங்கப்பட்டது. இது இவருக்கு 138ஆவது பட்டமாகும்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த தசரத் சிங், ராணுவப் பணியில் இருந்தபோது அவர் படித்த கல்வி முழுமையற்றதாக இருப்பதாக உணர்ந்து மனதுக்குள் சங்கடப்பட்டுள்ளார். அறிவைப் பெருக்க, தொடர்ந்து படித்து பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

தசரத் சிங் மேலும் கூறுவதாவது:

படிப்பறிவில்லாத குடும்பத்தில் பிறந்த நான் எனது கிராமத்தில் உள்ள பள்ளியில் படிப்பைத் தொடங்கினேன். அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பை முடித்த பிறகு, நிதி நெருக்கடிகள் காரணமாக மேற்கொண்டு படிக்கமுடியவில்லை.

எனது கிராமத்தின் பெயர் கிரோத். அது இளைஞர்களை ராணுவப் பணிக்கு அனுப்புவதில் பெயர் பெற்றதாகும். நானும் ராணுவத்தில் சேர மனு செய்தேன். தேர்ந்தெடுக்கப்பட்டு, 1988இல் இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் 16 ஆண்டுகள் நான்கமிஷன்ட் அதிகாரியாக' பணியாற்றிய பிறகு, 2004இல் ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

ராணுவத்தில் பணிபுரிந்தபோது, இன்னும் நன்றாகப் படித்திருக்கலாம்... நாலு விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கலாம்...' என்ற எண்ணம் தோன்றும். ஆண்டுதோறும் எனக்குக் கிடைக்கும் இரண்டு மாத விடுமுறைக் காலத்தை, நான் படிப்பதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்.

ஓய்வு பெற்ற பிறகு படிப்பை தீவிரமாகத் தொடர்ந்தேன். முதலில் வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். மேலும் படித்தேன். இதுவரை, மூன்று முனைவர் பட்டங்கள், ஏழு இளங்கலைப் பட்டங்கள், 46 முதுகலைப் பட்டங்கள், 23 பட்டயங்கள், ராணுவப் படிப்புகள் தொடர்பான ஏழு பட்டங்கள், பல்வேறு துறைகளில் 52 சான்றிதழ்களைப் பெற்றுள்ளேன். இப்போது ஒரேசமயத்தில் பல படிப்புகளைப் படிக்கமுடியும் என்பதால்தான் இந்தச் சாதனையை என்னால் நிகழ்த்தமுடிந்தது.

ஒருகட்டத்தில் விடாப்பிடியாக சட்டம் படித்து வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினேன்.

பணி ஓய்வுக்குப் பிறகு ராணுவத்தின் சப்த சக்தி' கட்டளையகத்தில் சட்ட ஆலோசகர் பதவியை ஏற்று, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் தொடர்பான வழக்குகளை நடத்தி வருகிறேன்' என்கிறார் தசரத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.