தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மவுசு குறையாத மரக்கரி!

எரிவாயு அடுப்புகள் பரவலாகப் புழக்கத்துக்கு வராதபோது, கிராமங்களில் விறகு அடுப்புகள் இருந்தன.

News image

மரக்கரி

Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:06 pm IST

எரிவாயு அடுப்புகள் பரவலாகப் புழக்கத்துக்கு வராதபோது, கிராமங்களில் விறகு அடுப்புகள் இருந்தன. அதனால் கோடைக் காலங்களிலும் மரங்கள் வெட்டப்படும்போது விறகுகளை மக்கள் சேகரிப்பர். நாளடைவில் எரிவாயு அடுப்புகள் புழக்கத்துக்கு வந்து, இன்று விறகு அடுப்புகள் அரிதாகிவிட்டன.

தற்போதெல்லாம் வேளாண் நிலங்களிலும், நிலத்தின் ஓரப்பகுதிகளிலும் வளர்ந்திருக்கும் மரங்களை சொந்த தேவைக்கும், வருமான நோக்கில் விற்பனை செய்யும்போதும் அதன் வேர்ப்பகுதியைத் தோண்டி எடுப்பதில்லை. சிறிய இயந்திரங்களைக் கொண்டு தரைமட்ட அளவுக்கு மரங்களை வெட்டுகின்றனர்.

இருளர் இன மக்கள் இன்று வேளாண்மை, கால்நடை வளர்ப்பு என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் மரக்கரி தயாரிப்பதையும் பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், புதுவேட்டக்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன இளைஞர் பாலு கூறியது:

'மழைக்காலங்களில் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கு வெப்பத்தைக் கொடுப்பதற்காகவும், டீக் கடைகளுக்காகவும் சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வந்து வியாபாரிகள் மரக்கரியை வாங்கிச் செல்கின்றனர். சிலிண்டர் விலை உயர்ந்து மரக்கரியின் தேவை அதிகரித்தாலும் கூட விலை உயரவில்லை. கடந்த ஆண்டு ஒரு மூட்டை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இப்போது 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மரக்கரியில் எப்போதும் பெரிய அளவில் விலையில் மாற்றம் இருப்பதில்லை. பெரும்பாலும் ஏரிகள், ஓடைகளில் உள்ள மரங்களை வெட்டி கரி மூட்டம் போட்டாலும், சில நேரங்களில் விலைக்கு வாங்க வேண்டியும் உள்ளது. மரங்களின் மற்ற பாகங்களைக் காட்டிலும் வேர்ப்பகுதியே கரி மூட்டம் போடுவதற்கு ஏதுவானதாக இருக்கும்' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.