தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

எல்லார் வாழ்க்கையிலும் ஒரு துரோகம் இருக்கு!

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 10:00 pm IST

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் துரோகம் பற்றியும், தேசிய விருது முடிவுகள் குறித்தும் டி. இமான் பேசியிருக்கிறார்.

அதில், 'யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காமல் இருக்கு? எல்லோரின் வாழ்க்கையிலும் அப்படி ஏதோ ஒரு சம்பவம் இருக்கத்தான் செய்யும். இந்தப் படத்துக்காகப் பாடலாசிரியர் பா. விஜய் ஒரு பாடலை எழுதியிருக்காரு. அந்த வரிகள் எனக்கு ரொம்பவே 'ரிலேட்' ஆச்சு. அந்தப் பாடலைக் கேட்கும் அனைவராலும் அவங்க வாழ்க்கையில நடந்த ஏதோ ஒரு சம்பவத்தோட ஒத்துப்போகும். அதே வரி இயக்குநர், தயாரிப்பாளர்னு எல்லாருக்குமே கனெக்ட் ஆச்சு.

ஒரு படைப்பின் நோக்கமே எத்தனை பேருக்கு அது போய்ச் சேருதுங்கிறதுதான். ஒரு பாடலின் வரி பலரோட உணர்வுகளோடு ஒத்துப் போகும்போது அது பெரிய சந்தோஷம்தான்' என்றவர், தேசிய விருது முடிவுகள் குறித்தும் பேசினார்.

'இந்தப் பாட்டு, அந்தப் பாட்டுங்கறதெல்லாம் தாண்டி, தேசிய அளவில் நம்ம மாநிலத்துக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்குதுன்னா, அதை ஒட்டுமொத்த தமிழர்களோட வெற்றியாகத்தான் பார்க்கணும். அதை நம்ம மாநிலத்தின் பெருமையா நினைச்சு சந்தோஷப்படணும். அதைவிட்டுட்டு, 'இது தகுதிதானா'ங்கற ஆய்வுக்குள்ள போகக் கூடாதுன்னு நினைக்கிறேன்' எனப் பகிர்ந்திருக்கிறார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.