பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தோல் அரிப்பு, தடிப்பு குணமாக...

உடலில் நீண்ட காலமாகத் தங்கி, உடனடியாக விஷ அறிகுறிகளை ஏற்படுத்தாமல், காலப்போக்கில் தோல் அரிப்பு, தடிப்பு, செரிமானக் கோளாறு, உடல் சோர்வு போன்ற பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும் உபாதைகளுக்கான ஆயுர்வேத தீர்வு என்ன?

Published On :23 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

உடலில் நீண்ட காலமாகத் தங்கி, உடனடியாக விஷ அறிகுறிகளை ஏற்படுத்தாமல், காலப்போக்கில் தோல் அரிப்பு, தடிப்பு, செரிமானக் கோளாறு, உடல் சோர்வு போன்ற பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும் உபாதைகளுக்கான ஆயுர்வேத தீர்வு என்ன?

-ராமசாமி, புதுச்சேரி.

ஆயுர்வேதத்தில் அகத தந்திரம் என்பது விஷங்கள், நச்சுப்பொருள்கள் மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய சிறப்புப் பிரிவு. இதில் "தூஷீவிஷம்' என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு கருத்தாகும்.

"தூஷீ' என்பது மறைந்து இருப்பது, வீரியம் குறைந்திருப்பது அல்லது நீண்ட காலம் தங்குவது என்ற பொருளிலும், "விஷம்' என்பது நச்சுத்தன்மையையும் குறிக்கிறது.

ஆயுர்வேத நூல்களின் விளக்கப்படி, ஒருவிஷப்பொருள் முழுமையாக உடலை விட்டுவெளியேறாமல் சிறிதளவு மீதமிருந்தால் அல்லது அதன் வீரியம் குறைந்து உடலில் நீண்டகாலம் தங்கினால், அது உடனடி தீவிர விஷ அறிகுறிகளை ஏற்படுத்தாமல், பின்னர் சாதகமற்ற சூழ்நிலையில் வெளிப்படலாம் என்று கருதப்படுகிறது.

தூஷீ விஷம் என்பது ஆயுர்வேதத்தின் தனித்துவமான பாரம்பரியக் கருத்தாகும். பிப்பலி, த்யாமகம், ஜடாமாஞ்சி, லோத்ரா, ஏலக்காய், சுவர்ச்சிகா, குடன்னட, தகரவிதை, கோஷ்டம், யஷ்டிமது, சந்தனம் மற்றும் கைரிகம். இந்த 12 பொருள்களும் சம அளவில் பொடித்து, அரைத்து மாத்திரையாக உருட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

ஒரு சில ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பாளர்கள் இதை மாத்திரையாகத் தயாரித்து விற்பனையும் செய்து வருகிறார்கள். தற்சமயம் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.

நீண்டகால விஷ பாதிப்புடன் தொடர்புடைய நிலைகள், தோல் நோய்கள், அரிப்பு, எரிச்சல், சிலவகையான காய்ச்சல், செரிமானக் கோளாறுகள், உடலில் நச்சுத்தன்மை சார்ந்த அறிகுறிகள், விஷ பாதிப்புக்குப் பிந்தைய சில நிலைகள் ஆகியவற்றில் இந்த மாத்திரையானது பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், எந்த நோய்க்காக, எந்த அளவில், எத்தனை நாள்களுக்கு, எந்த அனுபானத்துடன் கொடுக்கவேண்டும் என்பதை நோயாளியின் தோஷ நிலை, வயது, உடல் நிலை, நோயின் தன்மை மற்றும் பயன்படுத்தப்படும் தயாரிப்பின் கலவை ஆகியவற்றைப் பார்த்து ஆயுர்வேத மருத்துவர் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைய காலத்தில் ‘DETOX' என்ற சொல் மிகவும் பிரபலமாகிவிட்டது. தலை வலிமுதல் தோல்நோய்வரை எல்லாவற்றுக்கும் உடலில் "TOXINS' இருப்பதாகக் கூறி, மருந்துகளை சுயமாக எடுத்துக் கொள்வது சரியான அணுகுமுறை அல்ல. ஆயுர்வேதத்தில் தூஷீ விஷம் என்பது ஒரு குறிப்பிட்ட பாரம்பரிய நோயியல் கருத்து. அதனை நவீன மருத்துவத்தின் "heavy Metal poisoning', "drug toxicity', "food poisoning போன்ற ஒவ்வொரு நிலையுடனும் நேரடியாக ஒப்பிட முடியாது. தூஷீ விஷம் தொடர்பான ஆயுர்வேத சிகிச்சை பெறும்போது, எளிதில் செரிமானமாகும், புதிதாகச் சமைத்த உணவு பொதுவாக ஏற்றதாக இருக்கும்.

சாப்பிட ஏற்றவை: சூடாகவும் புதிதாகவும் தயாரிக்கப்பட்ட உணவு, கஞ்சி, பழைய அரிசியால் நன்கு வேக வைக்கப்பட்ட சாதம், பாசிப்பருப்பு, காய்கறி சூப், கீரைகள் - உடல்நிலைக்கேற்ப, சுரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், மாதுளை, நெல்லிக்காய், மிதமான அளவில் மோர், போதுமான அளவில் தண்ணீர் அதிகமாகச் சாப்பிடுவது நல்ல உணவு அல்ல; எளிதாகச் செரிப்பதே நல்ல உணவு.

தவிர்க்க வேண்டியவை: எண்ணெய்யில் பொரித்த உணவு - பஜ்ஜி, போண்டா, வடை, சிப்ஸ் போன்றவை. அதிக சர்க்கரை-இனிப்பு, கேக், பேஸ்ட், குளிர்பானங்கள், அதிக சர்க்கரை சேர்த்த பானங்கள், அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள்.

நீண்ட காலம் உடலினுள்ளே தங்கி நிற்கும் விஷக்கழிவுகளை அகற்ற, திக்தகம், மஹாதிக்தகம் போன்ற கஷாய மருந்துகளைச் சில நாள்கள் சாப்பிட்டு, அவற்றை உடலிலிருந்து இளக்கி, அதன்பிறகு பேதி மருந்துகளாகிய மாணிபத்ரம், த்ருவிருத் போன்ற லேஹியங்களால் குடலைச் சுத்தப்படுத்தி, விஷப்

பொருள்கள் முழுவதுமாக நீங்கிய நிலையில், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் கஷாய மருந்துகளை அருந்துவதும் சிறப்பான ஆரோக்கியத்துக்கான வழிமுறைகளாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.