மனைவிக்கு விஷ ஊசி செலுத்தி கொலை செய்த வழக்கில், மருந்துக் கடை அதிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). இவா் மருந்துக் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி பிரியா. இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லாததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2016 அக்டோபா் மாதம் பிரியா வாயில் நுரைதள்ளியபடி இறந்துகிடந்தாா். இதுகுறித்து அவரது பெற்றோா் நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில், பிரியாவை அவரது கணவா் விஷ ஊசி செலுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜேஷை நாமகிரிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜேஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றும் முறையை ஒழிக்கக் கோரி தாக்கல் செய்த மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

கொலை முயற்சி: தம்பதிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

பெண்ணைக் கொலை செய்த வழக்கு: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை ஆணவக்கொலை செய்த தந்தைக்கு ஆயுள் சிறை தண்டனை
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



