உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

விண்வெளியில் துணி வெளுக்க துப்பாக்கி!

தோய்க்காத துணிகள் வீட்டில் தேங்கினால் ஏற்படும் துர்நாற்றம் சகிக்க முடியாது. இதேநிலைதான் விண்வெளியில் விண்கலத்தில் இருக்கின்ற குட்டி அறையிலும் ஏற்படுகிறது.

Published On :30 ஆகஸ்ட் 2026, 11:30 am IST

தோய்க்காத துணிகள் வீட்டில் தேங்கினால் ஏற்படும் துர்நாற்றம் சகிக்க முடியாது. இதேநிலைதான் விண்வெளியில் விண்கலத்தில் இருக்கின்ற குட்டி அறையிலும் ஏற்படுகிறது.

பூமியிலாவது 'டக்'கென்று எல்லாத் துணிகளையும் ஒரு துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டு எடுத்து விடலாம்.ஆனால், விண்வெளியிலோ தண்ணீருக்கு எப்போதும் தட்டுப்பாடு தான். அளவோடு கவனமாக நீரை அங்கு உபயோகிக்க வேண்டும். அங்குத் துணியைத் துவைப்பது என்பது எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒரு விஷயம்!

லாண்ட்ரி கன்

லாண்ட்ரி கன்

உடல் துர்நாற்றத்தைவிட மோசமான துணிகளின் துர்நாற்றம் தொற்றுநோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்களால் உருவாகிறது. விண்வெளி வீரர்கள் ஒரே ஆடையை பல நாள்கள் அணிந்திருக்க வேண்டிய கட்டாயம் விண்கலத்தில் உண்டு. பல வாரங்கள் தாங்கள் உபயோகித்த துணிகளை காற்று புகமுடியாத ஏர்-டைட் பைகளில் போட்டு வைத்துவிடுவார்கள். பூமிக்குத் திரும்பி வந்து தங்களின் பழைய துணிகளைத் தோய்ப்பார்கள் அல்லது எரித்து விடுவார்கள். இதுவே அவர்களின் பழக்கம்.

சரி, இப்போது செவ்வாய் கிரகத்துக்கு தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போது, இந்தத் துணி பிரச்னையை எப்படிச் சமாளிப்பது? விஞ்ஞானிகள் இந்தத் தீராத பிரச்னைக்கு இப்போது ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டார்கள். தங்கள் லாண்ட்ரி பிரச்னையைப் பற்றி இனி அவர்கள் கவலைப்பட வேண்டாம். துணிகளைச் சுத்தம் செய்ய 'லாண்ட்ரி கன்' ஒன்று இனி அவர்களுக்குத் தரப்படும். அது அவர்களின் அழுக்குத் துணியைச் சுத்தமாக்கிவிடும். அந்த லாண்ட்ரி துப்பாக்கியை வைத்து துணிகளின் மீது 'சுட்டால்' போதும்... அது வயலட் நிறமுள்ள பிளாஸ்மாக்களை துணிகளில் செலுத்தி பாக்டீரியாக்களை அழித்து துணிகளை நன்கு சுத்தமாக்கிவிடும்.

பிளாஸ்மா துகள்கள்

பிளாஸ்மா துகள்கள்

இந்த 'கன்' நுண்ணுயிரிகள் எனப்படும் மைக்ரோபியல் லோடை சுத்தப்படுத்தி, விண்வெளி வீரர்களின் உடல்நலத்தைக் காப்பாற்றும். ஹண்ட்ஸ்வில்லியில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான கபே ஸý தான் இந்தத் துணி துவைக்கும் துப்பாக்கியை உருவாக்கியவர். 'இந்தத் துப்பாக்கி அவர்கள் துணிகளைச் சுத்தப்படுத்துவதோடு, அவர்களின் கருவிகளையும் அவர்கள் செவ்வாய்கிரகத்தில் காலடி பதிக்கும் முன்னர் சுத்தமாக்கி விடும்' என்கிறார் அவர்.

பிளாஸ்மா என்பது ஆற்றல் ஊட்டப்பட்ட அணுத்துகள்கள், ஐயான்கள், எலக்ட்ரான்களால் ஆக்கப்பட்ட ஒரு கலவை ஆகும். பொதுவாக, பிளாஸ்மாக்கள் சூரிய வெளிச்சத்தில் காணப்படும் உஷ்ணத்துடன் இருக்கும். ஆனால், இந்த கன்னில் உள்ள பிளாஸ்மாக்கள் குளிர்ச்சியுடன் இருக்கும். கிட்டத்தட்ட அறையில் இருக்கும் உஷ்ணநிலையில் இருக்கும். இது பார்க்கவும் அழகாக இருக்கும் என்று, இதை அணியும் ஆர்டிமிஸ் விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள் தங்கள் பாராட்டைத் தெரிவித்துவிட்டார்கள்.

இனி என்ன... விண்வெளி வீரர்களும் வீராங்கனைகளும் அழகுடன் சுத்தமான ஆடைகளை அணிந்து விண்வெளியில் பயமின்றிப் பயணிப்பார்கள்!

-ச. நாகராஜன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.