2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இது தெரியுமா? விக்கல், தும்மல், கொட்டாவி எதனால் வருகிறது? தும்மலின் வேகம் 160 கி.மீ.!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

கோப்புப்படம்

Published On :

விக்கல், தும்மல், கொட்டாவி இவை எதனால் வருகிறது தெரியுமா?

விக்கல்: நம் உடலில் சுவாசப் பையில் இருக்கும் 'டயாபிரம்' என்ற தோல் பகுதி திடீரென்று சுருங்குவதால் அதிகப்படியாக வரும் காற்றை சமாளிக்க முடியாமல் 'எபிக்லாட்டிஸ்' என்ற சுவாசக் குழாயின் மூடியானது 'டக்' என்று மூடிக்கொள்கிறது. புல்லாங்குழலில் காற்று தடைபடுவதுபோல சுவாசக்குழாயிலும் தடை ஏற்படுகிறது. இதனால் 'விக்' 'விக்' என்ற சத்தத்துடன் விக்கல் ஏற்படுகிறது.

தும்மல்: சுவாசக்குழாய்க்குள் தூசு, துகள்கள் வராமல் காற்றை வடிகட்டி அனுப்புவது, மூக்குத் துவாரத்தில் உள்ள சிறிய முடி இழைகளின் வேலையாகும். இவற்றைமீறி உள்ளே செல்லும் அழுக்கு, தூசு, துகள்கள் மற்றும் கடும் வெய்யிலில் நின்று குளிர்பானம் அருந்துதல், வெப்ப மாற்றம் இவைகளால் ஏற்படும் ஒவ்வாமையை உடலை விட்டு இயற்கையாக உந்தித் தள்ளுவதே தும்மல். தும்மலின் ஸ்பீடு மணிக்கு 160 கி.மீ வேகமாம்.

கொட்டாவி: நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கு அதிகமான கரியமிலவாயுவை (கார்பன்டைஆக்ஸைட்) வெளியேற்றிவிட்டு, புதிய பிராணவாயுவை (ஆக்ஸிஜன்) நுரையீரல் உள்வாங்கிக்கொள்வதற்காகவே கொட்டாவி ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள வெப்பத்தின் அளவு, உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தாலும் கொட்டாவி வரும். கொட்டாவி ஒரு தொற்றுவினை. ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தாலோ, கொட்டாவியைப் பற்றி பேசினாலோகூட மற்றவருக்கு கொட்டாவி வந்துவிடும்.
 

Summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.