குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

இது தெரியுமா? சிவப்பு வண்ணத்தைக் கண்டால் காளைகள் முட்ட வருவது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

News image

மஞ்சுவிரட்டில் சீறிப்பாயும் காளைகள். - கோப்புப்படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:35 pm IST

சிவப்பு வண்ணத்தைக் கண்டால் காளைகள் முட்ட வருகின்றனவே? இதற்கு என்ன காரணம்?

வெளிநாடுகளில் நடக்கும் காளைச் சண்டையை திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். அதில் அலங்காரமாக உடையணிந்த ஒரு வீரர், பயங்கரமாகக் கொழுத்து இருக்கும் காளை மாடு ஒன்றை அடக்குவதற்கு முயற்சி செய்வார். அவர் கையில் ஒரு சிவப்பு வண்ணத் துணி இருக்கும்.

அந்தத் துணியை  அவர் அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்து காளையைக் கேலி செய்வது போல போக்கு காட்டுவார். அதைக் கண்டவுடன் அந்தக் காளை மிரண்டு போய் அவரை நோக்கி எகிறி வரும். கடைசி நேரத்தில் அவர் விலகிக் கொள்ள காளை சற்று தூரம் போய், சடன் பிரேக் போட்டு நிற்கும். பார்ப்பவர்கள் எல்லோரும் கைகொட்டி ரசிப்பார்கள். இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தவுடன் நமக்கு, காளை மாட்டுக்கும் சிவப்பு வண்ணத்துக்கும் ஆகாது போல. அதனால்தான் காளை மிரள்கிறது, முட்ட வருகிறது என்ற எண்ணம்தான் தோன்றும்.  உண்மையில் அப்படியல்ல!

விலங்குகளுக்கு நிறங்களைப் பிரித்து திறன் கிடையாது. விலங்குகளுக்கு பார்வைத் திறன் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், பெரும்பாலான விலங்குகளுக்கு நிறத்தை வகைப்படுத்தும் அறிவு கிடையாது. சிவப்புத் துணி அசைவதுதான் காளைக்குத் தெரியும். அது சிவப்பா, பச்சையா, நீலமா, ஊதா கலரு ரிப்பனா என்றெல்லாம் தெரியாது.

எந்த நிறத் துணியை அசைத்தாலும் அது மிரளத்தான் செய்யும். துணியின் அசைவுதான் அதை மிரள வைக்கிறது, நிறம் அல்ல. துணி அசைவதால், தனக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று நினைத்துக்கொண்டுதான் காளை முட்ட வருகிறது.

இதுதான் உண்மை! சோதித்துப் பார்த்துவிடலாம் என்று பச்சை வண்ணத் துணியை எடுத்துக் கொண்டு காளையைத் தேடிப் போய்விடாதீர்கள்!

Summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.