வட்டி விகிதம் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!ஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!அரிசி விலை உயர்வு இன்னும் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்! பெ. சண்முகம்பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்! மக்களிடம் மனுக்களைப் பெற்றார்!மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!ராகுல், பிரியங்கா மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!‘தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்

இது தெரியுமா? விடியற்காலையில் சேவல் கூவுவது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

cock

சேவல் - மாதிரிப் படம்

Published On :

விடியற்காலையில் சேவல் கூவுவது ஏன்? விடியற்காலை என்று எப்படி தெரிகிறது? 

சேவல் விடியற்காலையில் சூரிய உதயம் தோன்றுவதற்கு முன்பே, தானே எழுந்து கொண்டு, கொக்கரக்கோ என்று கம்பீரமாகக் கழுத்தை நிமிர்த்தி நீட்டி முழக்குகிறதே! இது எப்படி சாத்தியம்? என்று பலர் வியந்து போயிருந்தாலும், யாரும் அதைப் பற்றிப் பெரிதாகச் சிந்தித்ததில்லை.

ஆனால், ஜப்பான் நாட்டின் நகோயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தகாஷி யோஷிமுரா என்ற பயாலஜி ஆராய்ச்சியாளர், தீவிரமாக யோசித்து பல சேவல்களை வெகு நாள்களுக்கு இருட்டு அறையில் வைத்து சோதித்துப் பார்த்தார்.

எப்படி இருட்டாக இருந்தாலும், நாள் தேதி தெரியாமல் இருந்தாலும் இரவு பகல் புரியாமல் இருந்தாலும் விடியற்காலையில் சூரிய உதயத்துக்கு முன்னர் அந்தச் சேவல்கள் கொக்கரக்கோ என்று குரல் எழுப்புவதை மட்டும் நிறுத்தவில்லை. ஆச்சரியப்பட்டுப் போனார் தகாஷி.

வெகு நாள்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு அவர் கண்டுபிடித்தது - சேவல்களின் உடம்புக்குள்ளே பயாலாஜிகல் கடிகாரம் ஒன்று இருக்கிறது என்பது. இந்தக் கடிகாரம் நாம் வைத்திருப்பதைப் போல் வட்டமாகவும் 12 எண்களைக் கொண்டதாகவும் இரண்டு பெரிய சிறிய முள்களைக் கொண்டதாகவும் இல்லை.

சேவல்களின் உள்ளுணர்வுதான் அந்தக் கடிகாரம். அதுதான் சேவல்களின் கொக்கரக்கோ சத்தம் எப்போது கிளம்ப வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறதாம். இந்தக் கடிகாரம் பேட்டரி போடாமலேயே காலம் காலமாக பரம்பரை பரம்பரையாகச் செயல்பட்டு வருகிறதாம்.

Summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.