தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இது தெரியுமா? தூங்கும்போது கனவுகள் வருவது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

dream

இது தெரியுமா? தூங்கும்போது கனவுகள் வருவது ஏன்? - படம்: செய்யறிவு

Published On :

தூங்கும்போது நமக்கு ஏன் கனவுகள் வருகின்றன?

மனித மூளையின் விநோதங்கள், இன்னும் எந்த மனித மூளையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. மனித மூளை ஏன் இப்படியெல்லாம் செயல்படுகிறது என்பது இன்னும் மனித அறிவுக்கு எட்டாததாகத்தான் இருக்கிறது. இந்த அறிவுக்கு எட்டாத விஷயங்களில் கனவும் ஒன்று.

மொத்த 7 மணி நேரம் தூங்குகிறோம் என்று வைத்துக் கொண்டால் அதில் குறிப்பிட்ட சில மணித்துளிகள்தான் மிக மிக நிம்மதியாகத் தூங்குகிறோம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். இந்த மணித்துளிகளில்தான் நமக்குக் கனவுகள் வருகின்றன. இப்படி வரும் கனவுகளையும் நாம் மீண்டும் மறுநாளில் நினைவுபடுத்தியும் பார்க்க முடிகிறது.

பகலில் நாம் செய்கின்ற, நினைக்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் மனித மூளை இரவில் நாம் தூங்கும்போது அசைபோட்டுப் பார்க்கின்றது. பகலில் நமக்கு எவ்வளவோ விஷயங்கள் நிகழ்கின்றன. இவற்றையெல்லாம் மூளை ஒழுங்குபடுத்தி எதை வைத்துக் கொள்வது எதை விட்டுவிடுவது என்பதையெல்லாம் நாம் தூங்கும்போது தீர்மானிக்க முயற்சி செய்கிறது.

இதனால்தான் நமக்குக் கனவுகள் உண்டாகின்றன என்று ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் வேறு சில விஞ்ஞானிகள் இதை மறுத்து, கனவுகள் எல்லாமே அர்த்தமற்றவைதான், அவற்றுக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்றும் கூறுகிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் மனித மூளையின் விசித்திரங்களை முழுவதுமாகக் கண்டறியாதவரைக்கும் நம்மால் இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதிலைக் கூற முடியாது என்பதுதான் உண்மை!

Summary

Regarding rare information that children should know...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.