கான் சார் மருத்துவமனை

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு அரசு மருத்துவமனைகள்தான் சாமானியர்களின் நம்பிக்கை.
கான் சார் மருத்துவமனை
Updated on
1 min read

'மருத்துவச் சிகிச்சைக்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைக்கு அரசு மருத்துவமனைகள்தான் சாமானியர்களின் நம்பிக்கை. ரத்தப் பரிசோதனைக்கு ரூ.7, இ.சி.ஜி. சோதனைக்கு ரூ.25 என கற்பனை செய்ய முடியாத அளவுக்கு எங்கள் மருத்துவமனையில் குறைவாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டயாலிசிஸ் முதல் புற்றுநோய் சிகிச்சை வரை கட்டணமும் குறைவு' என்கிறார் ஃபைசல் கான்.

சார்' என்றே அழைக்கின்றனர். இவரது மருத்துவமனை 'கான் சார் மருத்துவமனை' என்றே அழைக்கப்படுகிறது. அவர் கூறியது:

'படித்து முடித்ததும் ராணுவத்தில் சேர ஆசைப்பட்டேன். ஆனால், அதற்கான உடல் தகுதி என்னிடம் இல்லை. மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். என்னால் சாதிக்க முடியாததை மாணவர்கள் மூலம் சாதிக்க வைத்தேன். இணையத்திலும் கற்பிக்கத் தொடங்கி, பிரபலமான யூடியூபராக மாறினேன். மாணவர்களுக்குக் கற்பித்தலுடன், சமூகத்தில் உள்ள சமகால பிரச்னைகள் குறித்தும் சிந்திக்க, பேச, விமர்சிக்க விவாதம் செய்யத் தொடங்கினேன். என் வாழ்வில் நடந்த மாபெரும் திருப்பம் அதுதான்.

லட்சக்கணக்கானவர்கள் என்னைத் தொடருகிறார்கள். யூடியூப்பில் இருந்து வரும் வருமானத்தை வைத்து நான், சாதாரண மக்களுக்குப் பயன்படும்படி மருத்துவமனையைத் தொடங்கினேன். பணப் பற்றாக்குறையால் யாருக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்தேன். இங்கு அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும் சேவைகளும் மிகவும் சாதாரணக் கட்டணத்திலேயே கிடைக்கும்.

' சாமானியர் சிகிச்சைபெறத் தயங்குகிறார்கள். முதியவர்கள் தொடர் சிகிச்சைகளைத் தவிர்க்கிறார்கள். நாள்பட்ட நோயாளிகள் பணத்தைச் சேமிப்பதற்காக மருந்துகளின் அளவைக் குறைக்கின்றனர்.

ஆரோக்கியம் என்பது ஓர் அடிப்படை உரிமையாக இல்லாமல், ஓர் அபரிமித செலவாக மாறிவிடுகிறது. அதனால் சொந்தமாக மருத்துவமனையைத் தொடங்கி மிகக் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை பராமரிப்பு வழங்க முயற்சி செய்' என்று எனது அம்மா வலியுறுத்தினார். அந்த உந்துதலில் தொடங்கப்பட்டதுதான் இந்த மருத்துவமனை.

இப்படியான மருத்துவமனைகளை பல இடங்களிலும் தொடங்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்கவும் வசதி இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்' என்கிறார் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com