நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

சிரி... சிரி...

அந்த வீட்டுல ஏன் ரெய்டு பண்ணாங்க?

News image
Updated On :2 மே 2026, 10:46 pm

'அந்த வீட்டுல ஏன் ரெய்டு பண்ணாங்க?''

'ஸ்பேர் கியாஸ் சிலிண்டருங்க நிறைய வச்சிருந்தாங்களாம்!''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.



'டாக்டர், பாதி மறந்துவிடுகிறது.''

'புரியலையே...?''

'நீங்கள் டாக்டர்னு தெரிகிறது. ஆனால், கூற வந்தது மறந்துவிடுகிறது!'

-மஞ்சுதேவன், பெங்களூரு.



'ஏண்டா, ஆபீஸ் மாறப் போறேன்னு சொல்றே?''

'இப்பெல்லாம் வேலை செய்யச் சொல்றாங்கடா!''



'ஏங்க, என்கூட எங்கேயும் வெளியே வர மாட்டேங்கறீங்க?''

'வெளியே வந்ததும் வெயிட்டர் வேலை செய்யறது எனக்குப் பிடிக்கலைடி!''

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

'உங்க மனைவி உங்களுக்குச் சொந்தமா அந்நியமா, சார்?''

'கல்யாணத்துக்கு முந்தியா? பிறகா?''



'உங்க அம்மாவை அழைச்சிட்டுப் போய் ஏதாவது ஹோம்ல நீங்க சேர்க்கப்போறீங்களா அல்லது நான் போகட்டுமா?''

'நீ ஹோம்ல சேரப்போறீயா?''

'ஆசையைப் பாரு... நான் கொண்டு போய்ச் சேர்த்துட்டு வரவான்னு கேட்டேன்!''

-வி.ரேவதி, தஞ்சை.



'என்னது... இவர் ஆவிகூட பேசுறதுல கில்லாடியா?''

'ஆமா, ஆவி பறக்குற இட்லி கொண்டு வந்து வச்சா... அதுகூடயே பேசுவாரு!''



'டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது... சொல்லுங்க!''

'அடிக்கடி கிளினீக் வந்து போனதுல உங்க நர்ஸ்கூட கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி, டாக்டர்!''



'கணவருக்கு என்ன பிரச்னை?''

'மூட்டு வலியால நடக்கவே கஷ்டப்படுறாரு... ஆனா, ராத்திரியில தூக்கத்துல நடக்குற வியாதியில வேகமா நடக்குறாரு, டாக்டர்!''

-முகமது ஆதில், சென்னை.

'ஊசி போடப் போறேன், அழாதீங்க!''

'இப்ப அழ மாட்டேன்... ஆனா, நீங்க பீஸ் பிடுங்கும் போது அழாம இருக்கமுடியாது, டாக்டர்!''



'டெபிட் கார்டுல பேலன்ஸ் இல்லாம வச்சிருக்கீங்களே?''

'உங்களைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்... அதான் டாக்டர்!''



'போர்க்களத்தில் ஏன் ட்ரோன் சுற்றி வருகிறது, தளபதியாரே?''

'போரில் தாங்கள் மண்ணைக் கவ்வும் காட்சியை ஏரியல் வியூவில் படம்பிடிக்க ஒரு சேனல் செய்த ஏற்பாடு, மன்னா!''

-பர்வீன் யூனுஸ், சென்னை.



'வீடியோ காலில் பொண்ணு பாருங்க...''

'ஓயெஸ்! ஸ்வீட், காரம் செய்துவச்சு அதையும் வீடியோவில் காட்டிடுங்க!''



'இன்றைக்கு பாட்டு கச்சேரி எப்படி?''

'நல்லா அமையலைன்னு நாலு பேர் கிட்ட பாட்டு வாங்கினேன்!''



'ஏன் இப்படி அவசரப்படுத்தறே, ராப்பிச்சே?''

'டாக்சி வெயிட்டிங், தாயி!''



'ஒன் டூ த்ரீ சொல்லிட்டே படு...தூக்கம் வரும்.''

'எப்போ வரும்?''

'விடியறதுக்குள்ளே வந்துடும்.''

-பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.