விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோலிவுட் ஸ்டூடியோ!

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

News image

ரஜினி

Updated On :1 மணி நேரம் முன்பு

தேனப்பனுக்கு தங்கச் சங்கலி பரிசளித்த ரஜினி!

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் 'படையப்பா'. ரஜினிகாந்துடன் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்தின் 150-ஆவது படமாக வெளியான 'படையப்பா' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, கமர்ஷியல் படங்களுக்கு பென்ச்மார்க்காக இருக்கிறது.

அண்மையில் ரஜினிகாந்தின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ்

தனுஷ்

மம்முட்டியுடன் தனுஷ்!

அடுத்த படத்தின் வேலைகளில் வேகமெடுக்கத் தொடங்கி விட்டார் தனுஷ். 'கர'வுக்கு அடுத்து ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட 'டி 55' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடர்கிறது.

தனுஷின் 55-ஆவது படமாக, 'அமரன்' இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் படம் உருவாகிறது. இதன் படபூஜையில் இயக்குநர்கள் ஷங்கர், மாரிசெல்வராஜ், நடிகர் எஸ்.ஜே.சூர்யா, படத்தின் கலைஞர்கள் பங்கேற்றனர்.

இந்தப் படத்தில் தனுஷுடன் மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா எனப் பலரும் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதை இது என்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை எழில் அரசு கவனிக்கிறார். இதற்கு முன் 'ஸ்டார்', 'பைசன்' படங்களின் கேமராமேன் இவர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஏற்கெனவே இரண்டு பாடல்களை அவர் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஓப்பனிங் பாடலும் ஒன்று.

படத்தில் மம்மூட்டியின் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கும் என்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி யிடம் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் மம்மூட்டி. அவர் நடிப்பில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் 'பேட்ரியாட்'டில் இந்தியப் பாதுகாப்புத் துறை அதிகாரி டானியல் ஜேம்ஸ் ஆக ஸ்கோர் செய்திருக்கிறார்.

சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, பின்னர் செங்கல்பட்டு, மீண்டும் சென்னை என நடந்திருக்கிறது. சென்னையைத் தாண்டிய கிராமம் ஒன்றில் பிரமாண்டமான கோயில் திருவிழா அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. தேர்தலுக்காக சில நாள்கள் பிரேக்கில் இருக்கும் யூனிட், அடுத்த பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டது.

இன்னும் சில நாள்களில் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் தனுஷ். இந்த ஷெட்யூலில் ஸ்ரீலீலா காம்பினேஷனில் பாடல் காட்சியையும் படமாக்குகின்றனர். முந்தைய ஷெட்யூலில் மம்மூட்டி, தனுஷ் காம்பினேஷனும் படமாக்கப்பட்டுள்ளது.

'டி 55' படத்தை ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் முடித்துவிட்டு அடுத்து 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கத்துக்குச் செல்கிறார் தனுஷ். மதுரை பின்னணியில் நடக்கும் ஆக்ஷன் கதை இது என்கிறார்கள். படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது. இப்போது லொக்கேஷன் தேடலில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் தமிழரசன் என்றும் தகவல்.

தனுஸ்ரீ தத்தா

தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் மாஃபியா - தனுஸ்ரீ தத்தா காட்டம் !

பாலிவுட் திரையுலகில் நிலவும் அசாத்தியமான சூழல்கள், 'பாலிவுட் மாஃபியா' குறித்தும், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நடிகை ஜியா கான் ஆகியோரின் மரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் குறித்தும் நடிகை தனுஸ்ரீ தத்தா மீண்டும் விவாதத்தைத் தொடங்கியிருக்கிறார்.

அண்மையில் 'மேரி சஹேலி' இதழுக்கு அளித்த பேட்டியில், தனுஸ்ரீ தத்தா எவ்வித ஒளிவுமறைவுமின்றிப் பேசியிருக்கிறார். அதில், 'பாலிவுட்டில் மாஃபியாக்கள் இருப்பது முற்றிலும் உண்மை. அதனால்தான் இன்று ஜியா கானும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் நம்மிடையே இல்லை.

அப்படி ஒரு மாஃபியா கும்பல் இல்லையென்றால், திறமையான நட்சத்திரங்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் பெரும் துயரத்தில் இருந்தார்கள் என்பது வெளியே சொல்லப்படாத விஷயம். அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஒருவேளை தற்கொலைதான் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு மனிதன் அந்த நிலைக்குத் தள்ளப்படுவது ஏன்?

இது திடீரென நடப்பதல்ல. நீண்ட காலத் துயரத்தின் முடிவு. அவர்களை அந்த நிலைக்குக் கொண்டு வந்தது யார்? திரையுலகின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நடிகர்களுக்குத் தெரியும். இது நிலையான தன்மை கொண்ட 9 டு 5 வேலை கிடையாது. சில நேரங்களில் படங்கள் ஓடும், சில நேரங்களில் ஓடாது என்பது கலைஞர்களுக்குத் தெரியும். ஆனால், வெறும் தொழில்முறை பின்னடைவுகள் மட்டுமே ஒருவரை இத்தகைய விபரீத முடிவுக்குத் தள்ளாது. அப்படி நடந்தால், அந்த நபரை அந்த திசையில் தள்ளுவதற்கு ஒரு முயற்சி நடந்திருக்க வேண்டும்.

மற்றவர்களைக் கட்டுப்படுத்துவதும் துன்புறுத்துவதும் மட்டுமே அவர்களின் நோக்கம். நீங்கள் அவர்களோடு சேர்ந்து செயல்படாவிட்டால் உங்களை 'அந்நியன்' என்று முத்திரை குத்துவார்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்களை வெளியே தள்ளிவிடுவார்கள்.

திரைப்படங்களில் இத்தகைய யதார்த்தங்கள் காட்டப்படும் போதும், உலகளவில் இது போன்ற வழக்குகள் வெளிவரும் போதும், அதற்கும் நிஜத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கவே செய்கிறது. வெற்றியைப் பார்த்த ஒருவர் திடீரென்று ஏன் சரணடைய வேண்டும்?' என தனது பேட்டியை கேள்வியுடன் முடித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.